தமிழகம்

மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கண்டித்து தொழிற்சங்கங்கள் நாளை வேலைநிறுத்தம் : அரசு பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடுமா?

செய்திப்பிரிவு

மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கண்டித்து நாடு முழுவதும் நாளை தொழிற்சங் கங்கள் வேலைநிறுத்த போராட் டத்தில் ஈடுபடவுள்ளன. இதனால், தமிழகத்தில் அரசு பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடுமா? என கேள்வி எழுந்துள்ளது.

நாட்டில் ஏற்படும் சாலை விபத்துகளை குறைக்க மோட்டார் வாகன சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக முக்கிய அம்சங்களைக் கொண்ட வரைவு சட்டத் திருத் தம் உருவாக்கப்பட்டுள்ளது.

புதியதாக வரவுள்ள மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தில், அபராதத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது மேலும், மாநிலங்களில் உள்ள பொதுபோக்குவரத்து துறை தனியார் மயமாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

எனவே, இந்த மசோதாவை கண்டித்து நாளை (7-ம் தேதி) நாடுதழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இதனால், தமிழகத் தில் அரசு பேருந்துகள், ஆட்டோக் கள் ஓடுமா? என கேள்வி எழுந் துள்ளது.

இது தொடர்பாக ஏஐடியுசியின் மாநில பொதுசெயலாளர் ஜெ.லட் சுமணன் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டுவரவுள்ள மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, மாநில அரசு பொது போக்குவரத்து துறையின் உரிமைகளை பறிக்கும் விததத்தில் உள்ளது. பன்னாட்டு தனியார் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

மாநில அரசுகளுக்கு வர வேண்டிய வாகன வரி மத்திய அரசுக்கு சென்றுவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த புதிய சட்ட மசோதாவை எதிர்த்து தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் நாளை (7ம் தேதி) நாடுமுழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம்.

இந்த வேலை நிறுத்தத்தில் அனைத்து தரப்பட்ட வாகன ஓட்டுநர்களும் பங்கேற்கின்றனர். மாநிலங்களில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், லாரிகள், ஆட்டோக்கள், பழுது பார்க்கும் ஒர்க் ஷாப், டிரைவிங் ஸ்கூல், உதிரிபாக விற்பனைக் கடை கள் உரிமையாளர்கள் உட்பட லட்சகணக்கானோர் திரளாக பங் கேற்கவுள்ளனர். தமிழகத்தில் மட் டுமே ஒரு லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர் பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக அரசு போக்கு வரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தொழிற்சங் கங்களின் வேலைநிறுத்தத்தால் மக்களுக்கு பாதிப்பில்லாமல் அரசு பேருந்துகளை இயக்க போதிய ஏற்பாடுகள் செய்துள்ளோம். அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் போராட்டத்தில் ஈடுபடாத தொழிற்சங்க ஊழியர்கள், ஒப்பந்த மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை கொண்டு பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் முழு அளவில் அரசு பேருந்துகளை இயக்குவோம்’’ என்றனர்.

SCROLL FOR NEXT