தமிழகம்

பெயின்ட், டிவி, வாஷிங்மெஷினுக்கு வரி குறைப்பு: விலையை குறைக்காத தயாரிப்பாளர்கள், வணிகர்கள் மீது சட்ட நடவடிக்கை - தொழிலாளர் துறை எச்சரிக்கை

செய்திப்பிரிவு

வரி குறைக்கப்பட்ட பெயின்ட், வார்னிஷ், டிவி, வாஷிங்மெஷின் உள்ளிட்ட பார்சல் செய்யப்பட்ட பொருட்களின் விலையை குறைத்து விற்காத தயாரிப்பாளர் கள், வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் துறை எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக அத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த ஜூலை 21-ம் தேதி நடந்தது. இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் ஜூலை 27-ம் தேதி முதல் பெயின்ட், வார்னிஷ், குளிர்சாதன பெட்டி, வாஷிங் மெஷின், தொலைக்காட்சி பெட்டி, கிரைண்டர், மிக்ஸி, வாசனை திரவியங்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான வரிவிதிப்பு விகிதம் 28, 18, 12, 5 சதவீதத்தில் இருந்து குறைக்கப்பட்டது.

எனவே, நுகர்வோர் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதன் பயனை பெற வேண்டும் என, மத்திய அரசு நுகர்வோர் பாதுகாப்புத்துறை, சட்டமுறை எடையளவு பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, வரி குறைப்பால் குறைக்கப்பட வேண்டிய தொகையை, பொருட்களின் மீது தனியாக ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். முத்திரை அல்லது ஆன்லைன் பிரின்ட்டிங் மூலம் அறிவிப்பு செய்ய வேண்டும். குறிப்பாக ஏற்கெனவே உள்ள அதிகபட்ச சில்லறை விற்பனை விலை அருகிலேயே புதிய ஸ்டிக்கர் ஒட்டி விற்க வேண்டும்.

ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட விலை யில் ஸ்டிக்கர் ஒட்டி விற்கும் அனுமதி இருப்பில் உள்ள விற்கப்படாத உற்பத்தி செய்யப் பட்ட, பார்சல் செய்யப்பட்ட மற்றும் இறக்குமதி செய்து பார்சல் செய்யப்பட்ட பொருட்களுக் கும் பொருந்தும். இந்த பொருட் களை இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை விற்க அனுமதியளிக்கப்படுகிறது. மேலும், ஏற்கெனவே எம்ஆர்பி குறிப்பிட்டு ஒட்டப்பட்ட ஸ்டிக் கரில் திருத்தம் செய்யவோ, அடிக்கப்படவோ, சுரண்டப்படவோ கூடாது. ஜிஎஸ்டி குறைப்பு கார ணமாக பொதுமக்கள், நுகர்வோர் பயனடையும் வகையில் பொருட் களில் குறைக்கப்பட்ட விலையில் அறிவிப்பு செய்து விற்காத தயாரிப் பாளர்கள் மற்றும் வணிகர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட பொருட்கள், குறைக்கப்பட்ட எம்ஆர்பி விலையில் விற்கப் படாதது தொடர்பாக புகார்கள் இருந்தால், நுகர்வோர்கள், LMCTS கைபேசி செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலமாகவோ அல்லது கைபேசி எண் 9445398770 மூலமாகவோ தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT