தமிழகம்

கருணாநிதி மறைவு: ராஜாஜி அரங்கில் ரஜினிகாந்த் குடும்பத்துடன் அஞ்சலி

செய்திப்பிரிவு

 இன்று காலை ராஜாஜி அரங்கம் வந்தடைந்த ரஜினிகாந்த், திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு தன் குடும்பத்துடன் அஞ்சலி செலுத்தினார்.

ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் ராதாரவி ராஜாஜி அரங்கம் வந்து இறுதி மரியாதை செலுத்தினார். ராதாரவி தந்தை எம்.ஆர்.ராதா, கருணாநிதியின் நெருங்கிய நண்பர்.

மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஞானதேசிகன் இறுதி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக கருணாநிதி உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி அரங்கில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

அரசியல் தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்த ராஜாஜி அரங்கத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர்.

SCROLL FOR NEXT