80 ஆண்டுகால பொது வாழ்விலும், 56 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராகவும் ஒளிர்ந்த திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு வேதனை அளிக்கறது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு புகழாரம் சூட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.கருணாநிதி உடல் நலக்குறைவால், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார்.
திமுக தலைவர் மு. கருணாநிதியின் மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ''திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுச் செய்தி கேட்டு நான் மிகுந்த வேதனை அடைகிறேன். நாட்டின் முன்னணி தலைவராகவும், மூத்த அரசியல்வாதியாக திகழ்ந்தவர் கிருணாநிதி. 80 ஆண்டுகால பொதுவாழ்வு அனுபவம், 56 ஆண்டுகளாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து, நீங்காத அடையாளத்தை கருணாநிதி விட்டுச்சென்றுள்ளார்'' என்று வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.