தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் வலியுறுத்தி, கோரிக்கை முழக்க கூட்டம் மதிய இடைவேளையில் தலைமைச் செயலக வளாகத்தில் நேற்று நடத்தினர். இதில் சிலர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி எதிர் கோஷமிட்டனர். | படம்: ம.பிரபு | 
தமிழகம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி சென்னை தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை அமல்​படுத்​தக் கோரி தலை​மைச் செயலக ஊழியர்​கள் நேற்று மதிய உணவு இடைவேளை​யின்​போது போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். தமிழக அரசு ஊழியர்​களுக்கு பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை மீண்​டும் அமல்​படுத்​து​வது, மத்திய அரசைப்பின்பற்றி அகவிலைப்​படியை ஜூலை 1 முதல் உயர்த்தி வழங்​கு​வது, அரசுத் துறை​களில் உள்ள காலி​யிடங்​களை நிரப்​புவது உள்​ளிட்ட கோரிக்​கைகளை நிறைவேற்​றக் கோரி தமிழ்​நாடு தலை​மைச்​ செயலக சங்​கம் சார்​பில் நேற்று மதிய உணவு இடைவேளை​யின்​போது கோரிக்கை முழக்க போராட்​டம் நடந்​தது.

தலை​மைச் ​செயல​கம் அமைந்​துள்ள நாமக்​கல் கவிஞர் மாளிகை கட்​டிடத்​தி்ல் நடை​பெற்ற இந்த போராட்​டத்​தில் ஏராள​மான அலு​வலர்​கள், ஊழியர்​கள் கலந்​து​கொண்​டனர். இதில், தலை​மைச் செயலக சங்க தலை​வர் கு.வெங்​கடேசன் பேசும்​போது, ``தி​முக​வின் பிர​தான வாக்​குறு​தி​யான பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம் இன்​னும் நிறைவேற்​றப்​பட​வில்​லை.

இதுதொடர்​பாக அமைக்​கப்​பட்ட குழு​வும் அறிக்​கையை சமர்ப்​பிக்​காமல் காலம் கடத்தி வரு​கிறது. இது கண்​டிக்​கத்​தக்​கது. அதே​போல், அகவிலைப்​படியை மத்​திய அரசு உயர்த்தி வழங்​கி​யுள்ள நிலை​யில், தமிழக அரசு இன்​னும் உயர்த்​த​வில்​லை. அரசுத் துறை​களில் லட்​சக்​கணக்​கில் காலி​யிடங்​கள் உள்​ளன. அவற்றை நிரப்​பாமல் அரசுப் பணி​கள் தனி​யார்​மய​மாகி வரு​கின்​றன.

அரசு பணி​யிடங்​களை நிரப்​பாமல் தனி​யார்​மய​மாக்​கு​வதும் இட ஒதுக்​கீடு இல்​லாமல் செய்​வதும்​தான் சமூக நீதி​யா?'' என்​றார். இதற்​கிடையே, அரசு ஊழியர் ஒரு​வர், “தலை​மைச் செயலக சங்​கம் சரி​யாக செயல்​பட​வில்​லை, 4 ஆண்டு காலம் பொறுமை​யாக இருந்​து​விட்டு தற்​போது போராட்​டத்தை நடத்​துகிறீர்​களே?” என்று சங்க நிர்​வாகி​களிடம் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டார். இதனால் அங்கு சிறிது நேரம்​ சலசலப்​பு ஏற்​பட்​டது.

SCROLL FOR NEXT