குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா, திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்காக ஏஐ ஹைடெக் கட்டுப்பாட்டு அறை நிறுவ உதவிய கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய எஸ்.பி. ஆல்பர்ட் ஜான். 
தமிழகம்

தசரா, கந்தசஷ்டி விழாக்களில் 4 லட்சம் பக்தர்களை கையாள உதவிய ‘ஏ.ஐ. ஹைடெக் கட்டுப்பாட்டு’ அறை

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: குலசேகரன்​பட்​டினம் தசரா மற்​றும் திருச்​செந்​தூர் கந்​தசஷ்டி திரு​விழாக்​களில் சராசரி​யாக 4 லட்​சம் பக்​தர்​களை கையாள போலீ​ஸாருக்கு உதவும் வகை​யில் ஏ.ஐ. தொழில்​நுட்ப ஹைடெக் கட்​டுப்​பாட்டு அறையை நிறு​விய இரு பொறி​யியல் கல்​லூரி​களின் மாணவர்​கள் மற்​றும் பேராசிரியர்​களை காவல் கண்​காணிப்​பாளர் ஆல்​பர்ட் ஜான் நேரில் பாராட்​டி​னார்.

தூத்​துக்​குடி மாவட்​டத்​தில் சராசரி​யாக 4 லட்​சம் பக்​தர்​கள் பங்​கேற்ற குலசேகரன்​பட்​டினம் தசரா திரு​விழா, திருச்​செந்​தூர் கந்​தசஷ்டி திரு​விழா ஆகியவை சமீபத்​தில் நடை​பெற்​றன. இவ்​விரு விழாக்​களி​லும் பக்​தர்​களின் பாது​காப்பு மற்​றும் அடிப்​படை வசதி​களுக்​காக ஏ.ஐ. தொழில்​நுட்​பத்​தில் ஹைடெக் கட்​டுப்​பாட்டு அறை நிறு​வப்​பட்​டது.

காணா​மல்​போன குழந்​தைகளை மீட்க ‘பு​ராஜெக்ட் கார்​டியன்’ எனும் செயலி பயன்​படுத்​தப்​பட்​டது. வாக​னங்​கள் நிறுத்​தும் இடங்​களைக் கண்​காணித்​தல், போக்​கு​வரத்து நெரிசலை நேரடி​யாக கண்​காணித்​தல், மக்​களின் அடிப்​படை வசதி​கள் மற்​றும் தேவை​களை அறிந்து கொள்​ளுதல் ஆகிய​வற்​றுக்​காக ‘காப்​போட் ஏஐ’ எனும் தொழில்​நுட்​பம் பயன்​படுத்​தப்​பட்​டது.

இதற்​கான ஏ.ஐ. ஹைடெக் கட்​டுப்​பாட்டு அறையை கோவில்​பட்டி நேஷனல் பொறி​யியல் கல்​லூரி, ஈரோடு மாவட்​டம் சத்​தி​யமங்​கலம் பண்​ணாரி அம்​மன் இன்​ஸ்​டிட்​யூட் ஆஃப் டெக்​னாலஜி ஆகிய இரு கல்​லூரி​களின் மாணவர்​கள் மற்​றும் ஆசிரியர்​கள் நிறு​வி, வழிநடத்​தினர். இவ்விரு விழாக்​களி​லும் தலா 4 நாட்​கள் இந்த ஏ.ஐ. கட்​டுப்​பாட்டு அறை போலீ​ஸாருக்கு மிக​வும் பயனுள்​ள​தாக அமைந்​தது.

குழந்​தைகள் உடனுக்​குடன் மீட்​கப்​பட்​டனர். வாக​னங்​கள் மற்​றும் நகை திருட்டு முழு​மை​யாக கட்​டுப்​படுத்​தப்​பட்​டது. இதையொட்​டி, இவ்​விரு கல்லூரி​களின் பேராசிரியர்​கள் மற்​றும் மாணவ, மாணவி​கள், தூத்​துக்​குடி மாவட்ட காவல் அலு​வல​கத்​துக்கு நேற்று வரவழைக்​கப்​பட்​டனர். அவர்​களுக்கு எஸ்​.பி. ஆல்​பர்ட் ஜான் பாராட்​டுச் சான்​றிதழ் வழங்​கிப் பாராட்​டி​னார். காவல் துறை அதி​காரி​கள், கல்​லூரி பேராசிரியர்​கள் உடனிருந்​தனர்.

SCROLL FOR NEXT