காஸ் சிலிண்டர் வெடித்ததில் கணவன், மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்| களின் மகளும், வீட்டு உரிமையாள ரும் படுகாயம் அடைந்தனர்.
சென்னை தண்டையார்பேட்டை முத்தமிழ் நகரில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் ‘சி’ பிளாக்கில் வசித்தவர் சுப்பிரமணி (42). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சண்முக துரைச்சி (35). பால் வியாபாரம் செய்து வந்தார். இவர்களுக்கு பிரதீப்(16) என்ற மகனும், முத்துச்செல்வி(14) என்ற மகளும் உள்ளனர். பிரதீப் நெல்லையில் உறவினர் வீட்டில் தங்கியிருந்து படித்து வருகிறார். முத்துச்செல்வி மட்டும் பெற்றோருடன் இருந்தார். சுப்பிரமணி வசித்த வீடு 2 மாடிகளை கொண்டது. இதில் கீழ் தளத்தில் இரண்டு வீடுகள், முதல் தளத்தில் 2 வீடுகள் என 4 வீடுகள் உள்ளன. சுப்பிரமணி குடும்பத்துடன் கீழ்தளத்தில் வசித்தார். அதன் அருகிலேயே வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணன் வசிக்கிறார்.
புதன் கிழமை காலை 5.30 மணியளவில் சமையல் செய்வதற் காக துரைச்சியும், அவருக்கு உதவி செய்வதற்காக கணவர் சுப்பிரமணியும் சமையல் அறைக்குள் சென்றனர். அப் போது சமையல் எரிவாயு சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டு, வீடு முழுவதும் எரிவாயு பரவியிருந்தது. இதை உணராமல் அறையின் மின் விளக்கிற்கான ஸ்விட்சை சண்முக துரைச்சி ‘ஆன்’ செய்யவும் அதில் இருந்து வந்த தீப்பொறியால் அறை முழுவதும் தீப்பிடித்தது. இதில் ஏற்பட்ட அழுத்தத்தில் வீடும் வெடித்து சிதறியது. சுப்பிரமணியும், சண் முக துரைச்சியும் வீட்டிற்கு வெளியே தூக்கி வீசப்பட்டனர். அறைக்குள் தூங்கிக் கொண் டிருந்த அவர்களின் மகள் முத்துச்செல்வி மீது கட்டிட இடிபாடுகள் விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். வீட்டு உரிமையாளர் கிருஷ்ணன் வசித்த வீட்டின் சுவரும் இடிந்து விழுந்ததில் அவரும் படுகாயம் அடைந்தார்.
அருகே இருந்தவர்களும், தண்டையார்பேட்டை தீயணைப்பு நிலையத்தினரும் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காசிமேடு காவல் துறை ஆய்வாளர்கள் ஆனந்தராஜன், பன்னீர் செல்வம், உதவி ஆய்வாளர் ஜெயராமன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பலியான சுப்பிரமணி, சண்முக துரைச்சி இருவரின் உடல்களும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்த முத்துச்செல்வி, கிருஷ்ணன் இருவரும் மீட்கப் பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கிருஷ்ணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தேவை கவனம்
சிலிண்டர் வாங்கும்போது அதனுள் வாஷர் இருக்கிறதா என்பதையும் சோதனை செய்ய வேண்டும். இந்த வாஸர் இல்லையென்றால் ரெகுலேட்டரை மாட்டும்போது எரிவாயு கசிவு வேகமாக ஏற்படும். இதுவும் விபத்துக்கு ஒரு காரணம். இவையெல்லாம் கசிவு ஏற்படாமல் தடுப்பதற்கான வழிகள்.
கசிவு ஏற்பட்ட பின்னர் அவசரபடாமல் இருந்தாலே பல விபத்துக்களை தடுத்து விடலாம். சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்ட பின்னர் அவசரப்பட்டு மின் விளக்கு ஸ்விட்சை ஆன் செய்யும்போதுதான் அதிகமான விபத்துக்கள் நடக் கின்றன. ஸ்விட்சை ஆன், ஆப் செய்யும்போது ஏற்படும் மிகச்சிறிய தீப்பொறியே இதற்கு காரணம். இதனால் எரிவாயு கசிவு ஏற்பட்டதை அறிந்தால் அந்த இடத்தில் இருந்து முதலில் வெளியே வந்து விட்டு, தீயணைப்பு துறையினரை அழைப்பது மிகச் சிறந்தது.