காட்பாடி: தமிழக அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரத்தில் பூச்சாண்டிகளுக்கு அஞ்ச மாட்டேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழக அரசு இந்த விவகாரத்தை சட்டப்படி அணுகும்.
கரூர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுவதாக தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளது வேடிக்கையாக உள்ளது. 41 பேர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்துவிட்டு, பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு ஆறுதல் செல்லக்கூட செல்லாமல் இருந்தவர் மனிதாபிமானம் உள்ளவரா? தேவையான அனைத்து உதவிகளையும் செய்த நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவர்களா? இவ்வாறு துரைமுருகன் கூறினார்.