தமிழகம்

தமிழக மீனவர் படகுகளை விடுவிக்க முடியாது: இலங்கை கடற்தொழில் அமைச்சர் திட்டவட்டம்

செய்திப்பிரிவு

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 62 படகுகளை விடுவிக்க முடியாது என இலங்கை கடற்தொழில் அமைச்சர் ரஜிதசேனாரத்ன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டரை மாதங்களில் இலங்கை கடற்படையினரால் 62 விசைப்படகுகள் கைப்பற்றப்பட்டு, 350-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

சமீபத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட 94 தமிழக மீனவர்களை, கடந்த புதன்கிழமை இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை அதிபர் ராஜபக்ச விடுதலை செய்ய உத்தரவிட்டார். ஆனால் இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட விசைப்படகுகள் விடுவிக்கப் படவில்லை.

இந்நிலையில், கொழும்பில் சனிக்கிழமை மாலை நடை பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது இலங்கை கடற்தொழில் அமைச்சர் ரஜிதசேனாரத்ன விடம் இந்திய மீனவர்களின் விசைப்படகுகள் விடுவிக்கப் படுமா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘இந்திய மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட 62 படகுகளை விடுவிக் கும் பேச்சுக்கே இடமில்லை' எனத் தெரிவித்தார்.

தொடர் போராட்டம்

இந்நிலையில், ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படை யினரால் கைப்பற்றப் பட்ட விசைப் படகுகளை விடுவிக்கக் கோரி 24-வது நாளாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT