தமிழகம்

‘மவுன்ட்’ தலைவரின் பனையூர் பாதை | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

மலர்க் கட்சியின் ‘மவுன்ட்’ தலைவர் வியூக வகுப்பு நிறுவன பிரமுகர் ஒருவர் மூலமாக ‘பனையூர்’ கம்பெனியுடன் தொடர்ந்து டச்சில் இருக்கிறாராம். மாநிலப் பொறுப்பில் இருந்து அவரை விடுவித்த டெல்லி தலைமை, தேசியச் செயலாளர் பொறுப்பில் அமரவைக்க அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியதாம்.

ஆனால், “பெரிதாக எந்த அதிகாரமும் இல்லாமல் 11 பேரில் ஒருவராக அமர்ந்து சீட்டைத் தேய்த்து விட்டுப் போகவேண்டுமா... எனது அனுபவமும் அரசியல் அறிவும் கட்சியின் வளர்ச்சிக்குப் பயன்பட வேண்டும் என நினைக்கிறேன். அதனால் கட்சியின் 6 பொதுச் செயலாளர்களில் ஒருவராக என்னையும் அங்கீகரிப்பதாக இருந்தால் ஓகே” என்று சொன்னாராம் ‘மவுன்ட்’ தலைவர்.

முக்கிய முடிவுகளை எடுக்கும் கோர் கமிட்டியில் அமரும் அந்தஸ்து பொதுச் செயலாளர்களுக்கு இருக்கிறதாம். டெல்லி அலுவலகத்தில் தனி அறையில் அமர்ந்து அரசியல் செய்யும் அதிகாரப் பதவி என்பதால் ‘மவுன்ட்’ தலைவர் அதற்கு பிரியப்படுகிறாராம். பிஹார் தேர்தலுக்குப் பிறகு ‘மவுன்ட்’ தலைவருக்கு பார்ட்டியில் முக்கியப் பொறுப்பு தரப்படலாம். ஒருவேளை, அது மிஸ்ஸானால் ‘புதிய பயணத்தை’த் தொடங்க ஏதுவாகவே பனையூர் பக்கமும் பாதை போட்டு வைத்திருக்கிறாராம்.

SCROLL FOR NEXT