தமிழகம்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்ல ஜி.கே.வாசன் வாழ்த்து

செய்திப்பிரிவு

சென்னை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, மகளிர் ஒருநாள் கிரிகெட் போட்டியில் உலக கோப்பையை வெல்ல வாழ்த்துகள் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐசிசி மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை விழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. வெற்றிக்கு உழைத்த அத்துணை வீராங்கனைகளுக்கும். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்களின் அபார ஆட்டத்தால் அணியாக கருத்தப்பட்ட ஆஸ்திரேலியாவின் அணியை வெற்றி கண்டு சாதனை படைத்துள்ளது பாராட்டுக்குரியது. இந்த வெற்றியின் மூலம் ஏற்கெனவே நிகழ்த்தப்பட்டுள்ள பல்வெறு சாதனைகளை இந்திய மகளின் கிரிக்கெட் அணி முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அயார ஆட்டத்தால் 127 ரன்கள் எடுத்ததாலும், ஆட்டத்தாலும், கேப்டன் ஹர்மன்ப்ரீ கவுரின் திறமையான, பொறுப்பான இந்திய அணி வெற்றிக்கு அச்சாரமிட்டது பாராட்டுக்குரியது.

இந்திய மகளிர் அணியின் அனைவரது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் சிறந்த பயிற்சியாளும் இந்த வெற்றியை அடைந்துள்ளார்கள். நடைபெறவுள்ள இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று மகளிர் ஒருநாள் போட்டி உலக கோப்பையை கைப்பற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகிறேன்” எ என்று அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT