சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுக, அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக தனது கூட்டணிக் கட்சிகளுடன் கடந்த அக்.27-ம் தேதி ஆலோசனை நடத்தியது.
இதில் சென்னையில் நவ.2-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த முடிவானது. இதில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அழைப்பும் விடுக்கப்பட்டது.
அந்தவகையில் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்தை திமுக சார்பில் பூச்சி முருகன் நேற்று சந்தித்து அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இதேபோல், நாம் தமிழர் கட்சி, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.