இலங்கையை சேர்ந்தவர்களின் 7 பாஸ்போர்ட்கள் அடையாறு பகுதியில் சாலையில் கிடந்தன. இதுகுறித்து போலீஸார் தீவிர மாக விசாரணை நடத்தி வரு கின்றனர்.
சென்னை அடையாறு கஸ்தூரி பாய் தேஷ்முக் சாலையில் தனியார் நிறுவன ஊழியர் முகமது செவ்வாய்க்கிழமை மோட் டார் சைக்கிளில் சென்று கொண்டி ருந்தார். அப்போது சாலையின் நடுவே ஒரு பை கிடந்தது. அதை திறந்து பார்த்தபோது அதில் பாஸ்போர்ட்கள் இருந்தன. அவர் அந்த பையை அடையாறு போலீஸில் ஒப்படைத்தார்.
அதில் இலங்கை தமிழர்களின் 7 பாஸ்போர்ட்கள் இருந்தன. அவை ரவிச்சந்திரன், வடிவாம் பிகை, சாய் ஆர்.பி., கவுத மன், விசாகம், மற்றொரு வடிவாம் பிகை, ரவிச்சந்திரன் சண்முக ரத்தினசாமி என்ற பெயர்களில் இருந்தன. இந்த பாஸ்போர்ட் களின் உண்மைத் தன்மை குறித்து போலீஸார் முதற்கட்ட விசாரணை நடத்தினர்.
விசாரணையில்...
போலீஸார் நடத்திய விசா ரணையில், அந்த 7 பாஸ் போர்ட்டுகளும் இலங்கையில் இருந்து கண் சிகிச்சைக்காக சென்னை வந்தவர்களுக்கு உரியவை என்பது தெரியவந்தது. பாஸ்போர்ட் தொலைந்தது குறித்து அவர்கள் ஏற்கெனவே அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந் தனர். இதைத்தொடர்ந்து, 7 பாஸ்போர்ட்டுகளும் உரியவர் களிடம் ஒப்படைக்கப்பட்டன.