சீமான் | கோப்புப் படம். 
தமிழகம்

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு விஜய்தான் முதன்மைக் காரணம்: சீமான்

தமிழினி

சென்னை: “கரூர் சம்பவத்தில் யாரைப் பார்க்க கூட்டம் கூடியதோ அந்த நபர் மீது சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்யாதது ஏன்? என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வினவியுள்ளார்.

இது குறித்து அவர் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “கரூரில் 41 பேர் உயிரிழந்த குற்றத்துக்கு முதன்மைக் காரணம் விஜய்தான். தவறு இல்லை என்றால் ஏன் முன்ஜாமீன் கேட்கிறார்கள்?. குற்றத்துக்கு காரணமானவரையே சிபிஐ விசாரிக்காது எனில் பிறகு எப்படி நியாயம் வெளிவரும்?. யாரைப் பார்க்க கூட்டம் கூடியதோ அந்த நபர் மீது சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்யாதது ஏன்?. யாருடைய வருகையால் கூட்டம் கூடியது என்பது தான் கேள்வி? விஜய் வரவில்லை என்றால் அங்கு கூட்டம் கூடியிருக்குமா?. இவருக்கு இந்தச் சம்பவத்தில் பொறுப்பு இல்லையா?.

கூட்டணியில் சேர்ப்பதற்காகத்தான் ஆதவ் அர்ஜுனா, விஜய் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. கூட்டணிக்கு விஜய் வரவில்லை எனில் அவர் மீது வழக்குப்பதிவு செய்வார்கள். போலீஸ் மீது தவறு உள்ளதா என்பதை விசாரித்து முடிவெடுக்கப்படும். முதலில் உங்கள் பயணம் சேலத்தில் தானே இருந்தது, பின்னர் கரூருக்கு ஏன் மாற்றினீர்கள்?

விசாரணையை சிபிஐக்கு மாற்றியதும் முன்ஜாமீன் மனுவை புஸ்ஸி ஆனந்த் திரும்பப் பெறுகிறார் எனில் சிபிஐ அவரை பாதுகாக்கிறதா?. மக்கள் மனங்களில் மாறுதல் வேண்டும். அப்போதுதான் எல்லாமே மாறும். தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சிக்கு தான் சாதகமாக இருக்கும் என்பதை கூற முடியாது. இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT