தமிழகம்

‘அட்டகத்தி’ நாயகரின் வித்தைகள் | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

பின்னலாடை நகரத்தின் ‘வணக்கத்துக்குரிய’ பொறுப்பில் இருக்கும் ‘அட்டகத்தி’ நாயகரின் பெயர் கொண்டவர், அரசியலில் அடுத்தகட்டத்துக்குப் போக துடியாய் துடிக்கிறாராம். மாநகரத்தில் வளமாக‘வாழ்ந்தது’ போதாது என மாநில அளவில் முக்கிய பொறுப்புக்கு வர தனக்குத் தெரிந்த ‘வித்தைகள்’ அனைத்தையும் விதைக்கும் இவர், மலைக்கோட்டை மூத்த மாண்புமிகுவிடம் ‘அமைதிப்படை’ ரேஞ்சுக்கு பவ்யம் காட்டி தனக்கானதை எல்லாம் சத்தமில்லாமல் சாதித்துக் கொண்டே வருகிறாராம்.

“சிட்டி சீட் இந்த முறை நமக்குத்தான்” என்று தனக்கு நெருக்கமான வட்டத்தில் பேசி வரும் இவர், துணையானவரின் துணைவியாரின் கல்லூரி தோழர் என்ற ‘கோட்டாவிலும்’ கோலோச்சுகிறாராம்.

மேலும், கட்சித் தலைமைக்கு அரசியல் கணக்குகளைப் போட்டுக்கொடுக்கும் ‘தூவல்’ கம்பெனி ஆட்களுடனும் சகவாசம் வைத்திருக்கும்இவர், அவர்களுக்கு எந்த நேரத்தில் என்ன தேவையோ அதையெல்லாம் அவர்கள் எதிர்பார்ப்பதை விட ‘சிறப்பாகவே’ செய்துகொடுத்து தனது கசமுசாக்கள் எல்லாம் சிட்டி பார்டரை தாண்டி சென்னைக்குப் போய்விடாமல் செவ்வனே பார்த்துக் கொள்கிறாராம்.

SCROLL FOR NEXT