சட்டப் புள்ளியை பொது இடத்தில் தாக்கிய விவகாரத்தில் கூட்டணிக் கட்சி தலைவர் மீது வெளியில் சொல்ல முடியாத அதிருப்தியில் இருக்கிறாராம் கூட்டணி தலைவர்.
இந்த நிலையில், அந்த கூட்டணிக் கட்சித் தலைவர் இம்முறை தனது கட்சியில் பெண் ஒருவருக்கும் தேர்தல் வாய்ப்பளிக்கும் முடிவில் இருப்பதுடன், தென் மாவட்டங்களில் 2 தொகுதிகளில் போட்டியிட்டுப் பார்த்தால் என்ன என்றும் சொந்தக் கட்சிக்குள் ஆலோசனை நடத்தி இருக்கிறாராம்.
அதேசமயம், ஊரையும் தனது பெயரோடு சேர்த்து உச்சரித்து வரும் தங்கள் கட்சியின் அந்த ‘சிட்டிங்’ புள்ளிக்கு இம்முறை சீட் தரவேண்டாம் என்ற முடிவுக்கும் வந்திருக்கிறாராம் தலைவர்.