நாமக்கல் மாவட்டம் புளியங்காடு கிராமத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த சேந்த மங்கலம் திமுக எம்எல்ஏ பொன்னுசாமி உடலுக்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். (உள்படம்) பொன்னுசாமி. 
தமிழகம்

சேந்தமங்கலம் திமுக எம்எல்ஏ பொன்னுசாமி காலமானார்

செய்திப்பிரிவு

நாமக்கல்: சேந்​தமங்​கலம் சட்​டப்​பேர​வைத் தொகுதி திமுக எம்​எல்ஏ கு.பொன்​னு​சாமி (74) உடல்​நலக்​ குறை​வால் நேற்று காலமானார். நாமக்​கல் மாவட்​டம் சேந்​தமங்​கலம் தொகுதி திமுக எம்​எல்ஏ கு.பொன்​னு​சாமி, உடல்​நலக்​குறைவு காரண​மாக நேற்று காலை நாமக்​கல் தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார். மாரடைப்​பால் அவர் உயி​ரிழந்​த​தாக மருத்​து​வ​மனை நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது. அவருக்கு மனைவி ஜெயமணி, மகன் மாதேஸ், மகள் பூமலர் ஆகியோர் உள்ளனர்.

கொல்​லிமலை இலக்​கி​ராய்ப்​பட்​டியைச் சேர்ந்த பொன்​னு​சாமி, 9-ம் வகுப்பு வரை படித்​துள்​ளார். 2006 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் சேந்​தமங்​கலம் தொகு​தி​யில் வென்ற பொன்​னு​சாமி, 2011, 2016-ம் ஆண்​டு​களில் நடை​பெற்ற சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்​றி​வாய்ப்பை இழந்​தார். மீண்​டும் 2021 தேர்​தலில் போட்​டி​யிட்டு எம்​எல்ஏ ஆனார்.

          

அவரது உடல் சேந்​தமங்​கலம் நடுக்​கோம்பை ஊராட்சி புளி​யங்​காடு கிராமத்​தில் உள்ள அவரது இல்​லத்​தில் பொது​மக்​கள் பார்​வைக்கு வைக்​கப்​பட்​டது. துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், அமைச்​சர்​கள் எ.வ.வேலு, அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி, முத்​து​சாமி, சிவசங்​கர், மதிவேந்​தன், முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி உள்​ளிட்​டோர் அவரது உடலுக்கு மாலை அணி​வித்து அஞ்​சலி செலுத்​தினர். இன்று (அக். 24) கொல்​லிமலை​யில் உள்ள அவரது சொந்த கிராமத்​தில் பொன்​னு​சாமி​யின் உடல் அடக்​கம் செய்​யப்பட உள்​ளது.

ஆளுநர், முதல்​வர் இரங்​கல்: சேந்​தமங்​கலம் எம்​எல்ஏ பொன்​னு​சாமி மறைவுக்கு ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உள்​ளிட்​டோர் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

ஆளுநர் ஆர்​.என்​.ர​வி: சட்​டப்​பேரவை உறுப்​பினர் பொன்​னு​சாமி​யின் மறைவு மிகுந்த வருத்​தம் அ ளிக்​கிறது. அவரது குடும்​பத்​தினருக்கு ஆழ்ந்த இரங்​கல்.

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்: கு.பொன்​னு​சாமி மறைந்த துயரச் செய்தி அறிந்து மிக​வும் வருந்​தினேன். அவரது பிரி​வால் வாடும் சேந்​தமங்​கலம் தொகுதி மக்​கள், அவரது குடும்​பத்​தினர், உறவினர்​கள், திமுக தொண்​டர்​களுக்கு ஆறு​தல் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

இதே​போல, பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், இந்​தி​யக் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், முன்​னாள் எம்​.பி. சு.​திரு​நாவுக்​கரசர், கொமதேக பொதுச் செய​லா​ளர் ஈ.ஆர்​.ஈஸ்​வரன் உள்​ளிட்​டோரும் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT