தமிழகம்

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி சென்னையில் மழை முன்னெச்சரிக்கையாக 215 முகாம்கள் அமைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: வடகிழக்கு பரு​வ​மழை முன்​னெச்சரிக்கை நடவடிக்​கை​யாக சென்​னை​யில் 215 நிவாரண முகாம்​கள் அமைக்கப்பட்டு, 1.47 லட்​சம் பேருக்கு காலை உணவு வழங்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து தமிழகஅரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: அக்​.16-ம் தேதி வடகிழக்கு பரு​வ​மழை தொடங்​கியது. இதையடுத்து தமிழகம் முழு​வதும் பரவலாக மழை பெய்து வரு​கிறது. இதனால் பொது​மக்​கள் பாதிக்​கப்​ப​டா​மல் இருக்க, அனைத்து பாது​காப்பு நடவடிக்​கைகளை​யும் உடனடி​யாக மேற்​கொள்ள மாவட்ட ஆட்​சி​யர்​களுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார்.

மேலும் அக்​.19-ம் தேதி சென்னை எழில​கத்​தில் மாநில அவசர​கால செயல்​பாட்டு மையத்​திலிருந்து மாவட்ட ஆட்​சி​யர்​களு​டன் இணைந்து ஆய்வு மேற்​கொண்ட முதல்​வர், முன்​னேற்​பாடு நடவடிக்​கைகளை விரைவுபடுத்​த​வும், கரையோரங்​கள் மற்​றும் தாழ்​வான பகு​தி​களில் வசிக்​கும் மக்​களைப் பாது​காப்​பான இடங்​களுக்கு அழைத்​துச் செல்​ல​வும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

இதன் தொடர்ச்​சி​யாக மழை​யால் பாதிப்பு ஏற்​பட்​டால் மக்​கள் தங்​கு​வதற்​காக முகாம்​களை தயார் நிலை​யில் வைத்​திருக்​க​வும், அங்கு உணவு, குடிநீர், மருத்​துவ வசதி​கள் உள்​ளிட்ட அனைத்து வசதி​களை​யும் ஏற்​பாடு செய்​ய​வும் முதல்​வர் அறி​வுறுத்​தி​யுள்​ளார். சென்​னை​யில் மழைநீர் தேங்​கும் பகு​தி​களில் கூடு​தல் கவனம் செலுத்​த​வும் முதல்​வர் உத்​தர​விட்​டார்.

இதையடுத்து சென்​னை​யில் மழைநீர் தேங்​கும் பகு​தி​களி​லிருந்து மக்​களைப் பாது​காப்​ப​தற்​காக 215 நிவாரண முகாம்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இந்த முகாம்​களில் தங்​கவைக்​கப்​படும் மக்​களுக்கு உணவு வழங்​கு​வதற்​காக 106 உணவு தயாரிப்​புக் கூடங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. அவற்​றுள் 68 உணவு தயாரிப்​புக் கூடங்​களில் உணவு​கள் தயாரிக்​கப்​படு​கின்​றன.

சென்​னை​யில் பெய்​து​வரும் தொடர்​மழை காரண​மாக பாதிக்​கப்​பட்​டுள்ள மக்​களுக்கு பெருநகர மாநக​ராட்சி வாயி​லாக இந்த உணவு மையங்​களி​லிருந்து நேற்று 1 லட்​சத்து 46 ஆயிரத்து 950 பேருக்கு காலை உணவு வழங்​கப்​பட்​டுள்​ளது. 24 மணி நேர​மும் செயல்​பட்டு வரும் ஒருங்​கிணைந்த கட்​டளை மற்​றும் கட்​டுப்​பாட்டு மையத்​தில் பொது​மக்​களிட​மிருந்து ‘1913’ என்ற உதவி எண்​ணுக்கு வரும் புகார்​கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது.

வடகிழக்​கு பரு​வ​மழையை முன்​னிட்டு பெருநகர சென்னை மாநக​ராட்​சி​யில் அலு​வலர்​கள், பொறி​யாளர்​கள், பணி​யாளர்​கள், தூய்​மைப் பணி​யாளர்​களும், சென்னை குடிநீர்வாரி​யத்​தின் மூலம் 2,149 களப்​பணி​யாளர்​களும் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

தயார் நிலையில் சென்னை மாநகராட்சி: சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 1,436 மோட்டார் பம்புகள், 478 வாகனங்கள், 489 மர அறுவை இயந்திரங்கள் 193 நிவாரண மையங்கள், 150 மைய சமையல் கூடங்கள், மீட்பு பணிகளுக்காக 103 படகுகள், 22 ஆயிரம் பணியாளர்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT