மதியழகன், பவுன்ராஜ் 
தமிழகம்

தவெக நிர்வாகிகளுக்கு காவல் நீட்டிப்பு இல்லை: இருவரையும் விடுவித்து நீதிபதி உத்தரவு

செய்திப்பிரிவு

கரூர்: கரூரில் தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக, தவெக கரூர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் வி.பி.ம​தி​யழகன், நிர்​வாகி பவுன்​ராஜ் ஆகியோர் செப். 29-ம் தேதி கைது செய்​யப்​பட்​டு, திருச்சி மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

பின்​னர், கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் பவுன்​ராஜ் தாக்​கல் செய்த ஜாமீன் மனு அக். 8-ம் தேதி தள்​ளு​படி​யானது. தொடர்ந்​து, அதே நீதி​மன்​றத்​தில் மதி​யழகன் தாக்​கல் செய்த ஜாமீன் மனு கடந்த 13-ம் தேதி மீண்​டும் விசா​ரணைக்கு வந்​த​போது, வழக்கு சிபிஐக்கு மாற்​றப்​பட்டு உள்​ள​தால் விசா​ரணையை மறு​தேதி குறிப்​பி​டா​மல் நீதிபதி இளவழகன் தள்​ளி​வைத்​தார்.

இந்​நிலை​யில், மதி​யழகன், பவுன்​ராஜ் ஆகியோரின் நீதி​மன்​றக் காவல் நேற்று முன்​தினம் முடிவடைந்த நிலை​யில், குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்ற விசா​ரணைக்கு இரு​வரை​யும் திருச்சி மத்​திய சிறை​யில் இருந்து வீடியோ கான்​பரன்​ஸில் சிறப்பு புல​னாய்​வுக் குழு​வினர் ஆஜர்​படுத்​தினர்.

அப்​போது, மேலும் 15 நாள் நீதி​மன்​றக் காவலை நீட்​டிப்பு செய்​யு​மாறு சிறப்​புக் குழு சார்​பில் கோரிக்கை விடுக்​கப்​பட்​டது. அதற்கு எதிர்ப்​புத் தெரி​வித்த தவெக வழக்​கறிஞர்​கள், “வழக்கு விசா​ரணை சிபிஐக்கு மாற்​றப்​பட்​டுள்​ள​தால் குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​களின் கருத்தை நேரில் கேட்​டபிறகே காவல் நீட்​டிப்பு குறித்து முடிவு செய்ய வேண்​டும்” என வாதிட்​டனர்.

வழக்கு சிபிஐக்கு...

இதையடுத்​து, மாஜிஸ்​திரேட் பரத்​கு​மார் உத்​தர​வின்​பேரில் இரு​வரும் நேற்று குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றம் 1-ல் ஆஜர்​படுத்​தப்​பட்​டனர். அப்​போது, “வழக்கு சிபிஐக்கு மாற்​றப்​பட்​டுள்​ள​தால் நீதி​மன்ற காவல் நீட்​டிப்பு கேட்க முடி​யாது, இரு​வரை​யும் விடுவிக்க வேண்​டும்” என தவெக வழக்​கறிஞர் சீனி​வாசன் வாதிட்​டார். இரு​வருக்​கும் காவல் நீட்​டிப்பு கேட்​க​வில்​லை.

விசா​ரணையை சிபிஐ நீதி​மன்​றத்​துக்கு மாற்ற வேண்​டும் என அரசு தரப்​பில் கோரிக்கை விடுக்​கப்​பட்​டது. இதையடுத்​து, மதி​யழகன், பவுன்​ராஜ் ஆகியோ​ருக்கு காவல் நீட்​டிப்பு வழங்க மாஜிஸ்ட்​ரேட் பரத்​கு​மார் மறுப்​புத் தெரி​வித்​து, இரு​வரை​யும் விடு​வித்​தார். இதையடுத்​து, இரு​வரும் திருச்சி மத்​திய சிறைக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டனர். அங்கு பிர​மாண பத்​திரம் வழங்​கிய பிறகு இரு​வரும் சிறை​யில் இருந்து விடுவிக்​கப்​படு​வார்​கள் என்று கூறப்​படுகிறது.

SCROLL FOR NEXT