ராமேசுவரத்தில் உள்ள கலாம் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திய மத்திய இணையமைச்சர் எல்.முருகன். 
தமிழகம்

94-வது பிறந்த நாளையொட்டி கலாம் நினைவிடத்தில் எல்.முருகன் மரியாதை

செய்திப்பிரிவு

ராமேசுவரம்: ​முன்​னாள் குடியரசுத் தலை​வர் அப்​துல் கலாமின் பிறந்த தினத்​தையொட்டி ராமேசுவரத்​தில் உள்ள கலாம் நினை​விடத்​தில் மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன் மரி​யாதை செலுத்​தி​னார். மேலும், அங்கு சிறப்பு பிரார்த்​தனை நடை​பெற்​றது. ஆயிரக்​கணக்​கான மக்​கள் மரி​யாதை செலுத்​தினர்.

அப்​துல் கலாமின் 94-வது பிறந்த தினம் நாடு முழு​வதும் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதையொட்​டி, ராமேசுவரம் பேக்​கரும்​பில் உள்ள கலாமின் தேசிய நினை​வகம் வண்ண மின் விளக்​கு​கள், மலர்​களால் அலங்​கரிக்​கப்​பட்​டிருந்​தது.

கலாமின் அண்​ணன் மகன் ஜெயினுலாபுதீன், மகள் நசிமா மரைக்​காயர், மரு​மகன் நிஜாம், பேரன்​கள் ஆவுல்​மீ​ரா, முத்​து​மீரா மற்​றும் குடும்​பத்​தினர் இஸ்​லாமிய முறைப்​படி சிறப்புப் பிரார்த்​தனை செய்​தனர். இதில், அனைத்து சமூகத்​தினரும் கலந்து கொண்​டனர்.

தொடர்ந்​து, தமிழக அரசு சார்​பில் ராம​நாத​புரம் ஆட்​சி​யர் சிம்​ரன்​ஜீத் சிங் காலோன், கோட்​டாட்​சி​யர் ஹபிபூர் ரஹ்​மான் மற்​றும் அதி​காரி​கள் நினை​விடத்​தில் மலர் வளை​யம் வைத்​தும், மலர்​கள் தூவி​யும் மரி​யாதை செலுத்​தினர்.

நேற்று பிற்​பகல் மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன் மலர்​கள் தூவி மரியாதை செலுத்​தி​னார். இதே​போல, தமிழகத்​தின் பல்​வேறு பகு​தி​களில் இருந்​தும் வந்​திருந்த மாணவர்​கள், சுற்​றுலாப் பயணி​கள், பொது​மக்​கள், பல்​வேறு அமைப்​பு​களைச் சேர்ந்த ஆயிரக்​கணக்​கானோர் அப்துல் கலாம் நினை​விடத்​தில் மலர்கள் தூவி மரியாதை செலுத்​தினர்​.

SCROLL FOR NEXT