தமிழகம்

புதன் அதிகாலை 4 மணிக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக கலைஞர் உடல் ராஜாஜி ஹால் வருகை

செய்திப்பிரிவு

திமுக தலைவர் மு.கருணாநிதி செவ்வாய் மாலை 6.10 மணிக்குக் காலமானார். இந்நிலையில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிக்கை விடுத்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''கருணாநிதியின் உடல் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக கோபாலபுரம் இல்லத்தில் நள்ளிரவு 1 மணி வரை வைக்கப்பட்டிருக்கும். அதன் பிறகு அதிகாலை 3 மணி வரை சிஐடி காலனி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

பிறகு காலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலில் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் பிற தலைவர்களின் அஞ்சலிக்காக கருணாநிதியின் உடல் வைக்கப்படும்.''

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT