தமிழகம்

மா விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

செய்திப்பிரிவு

சென்னை: ​மாம்பழ விவ​சா​யிகளை பாது​காக்​கும் வகை​யில், மாம்​பழங்​களை அடிப்​படை​யாகக் கொண்ட பான உற்​பத்​தித் தொழிலில் குறைந்​த​பட்​சம் 18 முதல் 20 சதவீதம் வரை பழக்​கூழ் உள்​ளடக்​கத்தை உறு​தி​செய்ய அறி​வுறுத்த வேண்​டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்​வர் ஸ்​டா​லின் கடிதம் எழு​தி​யுள்​ளார்.

இதுகுறித்து நேற்று அவர் எழு​திய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மா விவ​சா​யிகளுக்கு நட்​டம் ஏற்​படு​வதைத் தவிர்க்​கும் வகை​யில் தமிழக அரசு தீவிரமான முயற்​சிகளை மேற்​கொண்டு வரு​கிறது. நான் ஏற்​கெனவே தெரி​வித்​த​படி, இந்​தியா​வில் விற்​கப்​படும்மாம்பழபானத்​தில் உள்ள பழக்கூழின் அளவு, இந்​திய உணவு பாது​காப்பு மற்​றும் தர நிர்ணய ஆணை​யத்​தின் (FSSAI) விதி​முறை​கள்​படி இல்​லை.

எனவே, பானங்​களில் மாம்​பழக்​கூழ் சேர்க்​கப்​படு​வ​தில் தரநிலைகள் கண்​டிப்​பாகப் பின்​பற்​றப்​படு​வதை உறுதி செய்​வதற்​கான வழி​முறை​களைப் பிறப்​பிக்க கோரியிருந்​தேன். அந்த கடிதத்​துக்கு இன்​னும் நேர்​மறை​யான பதில் ஏதும் கிடைக்​க​வில்​லை. எனவே, மா விவ​சா​யிகளின் நலனைக் கருத்​தில் கொண்​டும், நம்​நாட்​டில் இந்த பானத்தை அதி​கள​வில் பயன்​படுத்​தும் நுகர்​வோரின் நலனைக் கருத்​தில் கொண்​டும், மாம்​பழங்​களை அடிப்​படை​யாகக் கொண்ட பான உற்​பத்​தித் தொழிலில் குறைந்​த​பட்​சம் 18 முதல் 20 சதவீதம் வரை பழக்​கூழ் உள்​ளடக்​கத்தை உறு​தி​செய்ய அறி​வுறுத்த வேண்​டும்.

தமிழகத்​தின் மாம்பழ ஏற்​றும​திக் கொள்​கை​யானது மாம்பழ வகை ஏற்​றும​தியை மேம்​படுத்​து​வ​தி​லும், மாம்​பழப் பொருட்​களை பல்​வகைப்​படுத்​து​வ​தி​லும் கவனம் செலுத்​தும். அதற்​குத் தேவை​யான உள்​கட்​டமைப்பை உரு​வாக்​கு​வதன் மூல​மும், ஏற்​றுமதி தரநிலைகளுக்கு இணங்க செயல்​முறை​களை ஒழுங்​குபடுத்​து​வதன் மூல​மும் சாத்​தி​யப்​படும். அத்​தகைய நடவடிக்​கைகள் மாம்​பழங்​களுக்கு அதிக மதிப்​பைச் சேர்க்​கும் அதே வேளை​யில், மாம்​பழக்​கூழ் தொழில்​களை அதி​க​மாகச் சார்ந்​திருப்​ப​தை​யும் குறைக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

ஆகவே, இந்த முயற்​சிகளை மேலும் வலுப்​படுத்த மத்​திய அரசின் வணிக அமைச்​சகத்​தின்​கீழ் இயங்​கும் வேளாண் மற்​றும் பதப்​படுத்​தப்​பட்ட உணவுப் பொருட்​கள் ஏற்​றுமதி மேம்​பாட்டு ஆணை​யம், ஒருங்​கிணைந்த பேக்​கிங் செய்​யும் வசதி​கள், உள்​நாட்டு கொள்​கலன் கிடங்​கு​கள், குளிரூட்​டப்​பட்ட துறை​முகங்​கள், தரச்​சோதனை ஆய்​வகங்​கள், வாங்​குபவர்​-​விற்​பனை​யாளர் சந்​திப்​பு​களை ஏற்​பாடு செய்​தல், வெளி​நாட்டு வாங்​குபவர்​களை அடை​யாளம் காணுதல் மற்​றும் ஏற்​றுமதி தரநிலைகள் குறித்த திறன் மேம்​பாட்​டுத் திட்​டங்​களை நடத்​துதல் போன்ற உள்​கட்​டமைப்​பு​களை மேம்​படுத்​து​வதன் மூலம் தமிழகத்​துக்கு தேவை​யான ஆதரவை வழங்க வேண்​டும்.

இந்​தப் பிரச்​சினை​யில் தாங்​கள் இந்த தருணத்​தில் தலை​யிட்​டு, மா விவ​சா​யிகளின் நலன்​களைப் பாது​காப்​பதுடன், மேம்​பட்ட ஏற்​றுமதி, மதிப்​புக் கூட்​டல் மூலம் நாட்​டின் பொருளா​தா​ரத்​துக்​கும் குறிப்​பிடத்​தக்க பங்​களிப்​பைச் செய்ய உதவ வேண்​டும். இவ்​வாறு கூறியுள்​ளார்.

SCROLL FOR NEXT