சூரியன் முழுமையாக அஸ்தமித்தது, தமிழ் தன்னுடைய முடிவுரையை எழுதியது என்று திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.கருணாநிதி உடல் நலக்குறைவால், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார்.
திமுக தலைவர் மு. கருணாநிதியின் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் தமிழில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
''சூரியன் முழுமையாக அஸ்தமித்தது. தமிழ் தன்னுடைய முடிவுரையை எழுதியது. ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர் கருணாநிதி. கருணாநிதியின் இழப்பு காலத்தால் ஈடு செய்ய முடியாதது. அந்த காந்தக்குரலை இனி எப்படிக் கேட்பேன் கருணாநிதி ஐயா. முத்தமிழின் மூத்த மகனுக்கு என் வீர வணக்கங்கள்.''
இவ்வாறு ஹர்பஜன் சிங் இரங்கலில் தெரிவித்துள்ளார்.