தமிழகம்

கரூர் துயரம்: ஒரு வாரத்துக்குப் பின் தவெக சார்பில் நேரில் ஆறுதல்

க.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூரில் தவெக தலைவர் விஜய் உத்தரவின் பேரில், உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினரை முதன்முறையாக தவெக கரூர் மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

கரூரில் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். ஏற்கெனவே, உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்களை கரூர் மாவட்ட நிர்வாகிகள் சேகரித்து, அந்தப் பட்டியலை தமிழக வெற்றி கழகத்தின் தலைமைக்கு அனுப்பி வைத்த நிலையில், தற்போது பாதிக்கப்பட்டவர்களை விஜய் உத்தரவின் பேரில் தவெகவினர் நேரில் சந்தித்து வருகின்றனர்.

          

மேலும், விரைவில் கட்சியின் தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இருப்பதாகவும், உரிய உதவிகள் செய்து தருவதாக உறுதி அளித்து வருகின்றனர். இந்த சந்திப்புகளின்போது தவெக மேற்கு மண்டலச் செயலாளர் பாலு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கரூர் துயரக்குப் பின்னால்... - கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப்.27-ல் நடந்த தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசல் ஏற்​பட்டு 41 பேர் உயி​ரிழந்​தனர். 100-க்​கும் அதி​க​மானோர் படு​காயம் அடைந்​தனர். ஆனால், அன்று இரவே திருச்சி வந்த விஜய், தனி விமானம் மூலம் உடனடி​யாக சென்னை திரும்​பி​னார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து சென்னை வந்த சில மணி நேரங்களில் அவர் ஓர் இரங்கல் ட்வீட்டை வெளியிட்டார். அதில் விஜய், “இதயம் நொறுங்​கிப் போய் இருக்​கிறேன். தாங்க முடி​யாத, வார்த்​தைகளால் சொல்ல முடி​யாத வேதனை​யிலும், துயரத்​தி​லும் உழன்று கொண்​டிருக்​கிறேன். நம் உறவு​களை இழந்து தவிக்​கும் பெருந்துயர்​மிகு மனநிலை​யில், என் மனம் படு​கிற வேதனையை எப்​படி சொல்​வதென்றே தெரிய​வில்​லை.

கண்​களும், மனசும் கலங்​கித் தவிக்​கிறேன். நான் சந்​தித்த உங்​கள் எல்​லோருடைய முகங்​களும் என் மனதில் வந்து போகின்​றன. என் சொந்​தங்​களே, நம் உயிரனைய உறவு​களை இழந்து தவிக்​கும் உங்​களுக்​கு, சொல்​லொணா வேதனை​யுடன் ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக்​கொள்​ளும் அதே வேளை​யில், இந்த பெரும் சோகத்தை உங்​கள் மனதுக்கு நெருக்​க​மாக நின்று பகிர்ந்​து​கொள்​கிறேன்.

நமக்கு ஈடு​செய்​யவே இயலாத இழப்​பு​தான். யார் ஆறு​தல் சொன்​னாலும் நம் உறவு​களின் இழப்பை தாங்​கவே இயலாது. இருந்​தும், உங்​கள் குடும்​பத்​தில் ஒரு​வ​னாக, உறவை இழந்து தவிக்​கும் நம் சொந்​தங்​களின் குடும்​பம் ஒவ்​வொன்​றுக்​கும் தலா ரூ.20 லட்​ச​மும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரு​வோருக்கு தலா ரூ.2 லட்​ச​மும் அளிக்க எண்​ணுகிறேன்.

இழப்​புக்கு முன்​னால் இது ஒரு பெரும் தொகையன்​று​தான். ஆனாலும், இந்த நேரத்​தில், எனது உறவு​களான உங்​களு​டன் மனம்பற்றி நிற்க வேண்​டியது உங்​கள் குடும்​பத்தை சேர்ந்​தவ​னாக என் கடமை. அதே​போல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவு​களும் மிக விரை​வில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்​திக்​கிறேன். சிகிச்​சை​யில் இருக்​கும் நம் உறவு​கள் அனை​வருக்​கும் அனைத்து உதவி​களை​யும் தவெக உறு​தி​யாக செய்​யும். இறைவன் அருளால், அனைத்​தில் இருந்​தும் நாம் மீண்டு வர முயற்சிப்​போம்​.” என்று தெரிவித்திருந்தார்.

‘களத்தில் காணோமே’ - விஜய்யின் ட்வீட் வெளியான நிலையில், விஜய் கரூர் வந்தால் நிலைமை சிக்கலாகலாம், ஆனால் இரண்டாம் நிலை தலைவர்கள் கூடவா வர இயலாது. மாவட்ட அளவிலான நிர்வாகிகள் எங்கே எனக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துவந்தன. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை விஜய் உத்தரவின் பேரில் தவெகவினர் நேரில் சந்தித்து வருகின்றனர். மேலும், விரைவில் கட்சியின் தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இருப்பதாகவும், உரிய உதவிகள் செய்து தருவதாக உறுதி அளித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT