தமிழகம்

ஆர்எஸ்எஸ் நாணயத்தை பிரதமர் வெளியிடும் அவலநிலை மாற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

மு.சக்தி

சென்னை: ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மகாத்மா காந்தியின் 157வது பிறந்த நாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ”நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள்!

மக்களிடையே வெறுப்பின் விதைகள் தூவப்பட்டு, பிரித்தாளும் சக்திகள் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை எதிர்கொள்ளும் வலிமையை நமக்கு என்றும் வழங்கும் ஆற்றல் அவர்.

நம் தேசப் பிதாவைக் கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் RSS இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும். இதுவே காந்தியடிகளின் பிறந்தநாளில் நாட்டு மக்கள் அனைவரும் ஏற்க வேண்டிய உறுதிமொழி.” என்று முதல்வர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT