தமிழகம்

கருணாநிதியின் நினைவுகள் காலத்தால் அழியாதது: விஜயகாந்த் புகழாஞ்சலி

ஸ்கிரீனன்

கருணாநிதியின் நினைவுகள் காலத்தால் அழியாதது என்று விஜயகாந்த் புகழாஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்தது.

கருணாநிதியின் மறைவு குறித்து அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்த யுகத்தின் ஈடு இணையில்லா ஒப்பற்ற தலைவர் கலைஞர் காலமானார் என்கிற செய்தி கேட்டு மிகவும் துயரம் அடைந்தேன்.

அவர் மண்ணுலுகை விட்டு மறைந்தாலும், தமிழுக்கு ஆற்றிய தொண்டு,பழகும் தன்மை, நட்புணர்வு, ஐந்து முறை முதல்வராக இருந்த வரலாறு, அவரது நினைவுகள் காலத்தால் அழியாதது. முத்தமிழறிஞர்  டாக்டர் கலைஞரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார்

SCROLL FOR NEXT