கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த நிலையில் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். உடன் அமைச்சர் கே.என்.நேரு, எம்எல்ஏ செந்தில் பாலாஜி உள்ளிட்டோர். 
தமிழகம்

ஆணைய அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் உறுதி

செய்திப்பிரிவு

கரூர்: கூட்ட நெரிசல் சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை ஆணைய அறிக்கை​யின் அடிப்​படை​யில் நடவடிக்கை எடுக்​கப்​படும் என முதல்​வர் ஸ்டா​லின் தெரி​வித்​தார்.

கரூரில் நேற்று முன்​தினம் இரவு தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற பிரச்​சா​ரக் கூட்​டத்​தின்​போது கூட்ட நெரிசல் ஏற்​பட்​ட​தில் 40 பேர் உயி​ரிழந்​தனர். 51 பேர் காயமடைந்து மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இதையடுத்​து, தனி விமானம் மூலம் சென்​னை​யில் இருந்து நேற்று முன்​தினம் நள்​ளிரவு 1.30 மணி அளவில் திருச்சி வந்த முதல்​வர் ஸ்டா​லின், அங்​கிருந்து காரில் கரூர் சென்​றார்.

பின்​னர், கரூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் உயி​ரிழந்​தவர்​களின் உடலுக்கு நேற்று அதி​காலை 3.15 மணி அளவில் அஞ்​சலி செலுத்​தி​னார். காயமடைந்​தவர்​களை சந்​தித்து ஆறு​தல் கூறி​னார். பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் முதல்​வர் ஸ்டா​லின் கூறிய​தாவது: மிகுந்த துயரத்​தோடு, கனத்த இதயத்​துடன், விவரிக்க முடி​யாத வேதனை​யில் இருக்​கிறேன். நெரிசலில் சிக்கி பலர் மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​ட​தாக செய்தி கிடைத்​தவுடன், ஆட்​சி​யர் தங்​கவேல், எம்​எல்ஏ செந்​தில்​ பாலாஜி ஆகியோரை தொடர்பு கொண்​டு, உடனடி​யாக மருத்​துவ உதவி​களை அளிக்க உத்​தர​விட்​டேன்.

உயி​ரிழப்பு எண்​ணிக்கை தொடர்ந்து அதி​கரித்​த​தால், அமைச்​சர்கள் அன்​பில் மகேஸ், மா.சுப்​பிரமணி​யன் ஆகி யோரை​யும் கரூருக்கு அனுப்பி வைத்​தேன். அமைச்​சர்​கள் துரை​ முரு​கன், கே.என்​.நேரு, எ.வ.வேலு ஆகியோ​ருடன் ஆலோ​சனை நடத்தி போர்க்​கால அடிப்​படை​யில் நடவடிக்கை எடுக்க உத்​தர​விட்​டேன். இங்கு காலை​யில் வரலாம் என திட்​ட​மிட்ட நிலை​யில், தொடர்ந்து வந்த செய்​தி​கள் மனதை கலங்​கடித்​த​தால், மனது கேட்​க​வில்​லை. வீட்​டில் இருக்க முடி​யாமல், உடனடி​யாக புறப்​பட்டு வந்​து​விட்​டேன்.

அரசி​யல் கூட்​டத்​தில் இது​வரை நடக்​காத சம்​பவம். இனி​யும் இது​போல நடக்​கக் கூடாது. தீவிர சிகிச்​சைப் பிரி​வில் உள்ள 51 பேர் விரை​வில் குணமடை​வார்​கள் என நம்​பு​கிறேன்.உயி​ரிழந்​தவர்​களின் உடல்​களுக்கு கனத்த இதயத்​துடன் அஞ்​சலி செலுத்​தினேன். அவர்​களது குடும்​பத்​தினருக்கு என்ன ஆறு​தல் கூறி தேற்​று​வது என தெரிய​வில்​லை. நெரிசல் சம்​பவம் குறித்து விசா​ரிக்க உயர் நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலை​மை​யில் ஒரு நபர் விசா​ரணை ஆணை​யம் அமைக்க உத்​தர​விட்​டுளேன். தவெக தலை​வர் விஜய் மீது நடவடிக்கை எடுக்​கப்​படுமா என்று கேட்​கிறீர்​கள். அரசி​யல் நோக்​கத்​தோடு பதில் அளிக்கவிரும்​ப​வில்​லை. ஆணை​யத்​தின் அறிக்​கையை விரை​வில் பெற்​று, அதன் அடிப்​படை​யில் உரியநடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு முதல்​வர் கூறி​னார்.

அக்கறையுடன் விசாரித்த ராகுல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கரூரில் நடந்துள்ள துயரச் சம்பவம் குறித்து உள்ளார்ந்த அக்கறையுடன் விசாரித்து, சிகிச்சை பெற்றுவருவோரின் இன்னுயிர் காக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விசாரித்த சகோதரர் ராகுல் காந்திக்கு நன்றி’என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT