தமிழகம்

கரூர் சம்பவம்: தவெக பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த் உட்பட 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு

ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 39 பேர் உயிரிழந்தது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் கரூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கரூர் வேலுசாமிபுரத்தில் நேற்று நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 39 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக கரூர் நகர போலீஸார் தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச் செயலாளர் என்.ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகிய 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் கரூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதன்படி, பிரிவு 105 (கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை), பிரிவு 110 (குற்றமற்ற கொலை செய்ய முயற்சி), பிரிவு 125 (மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசரம் அல்லது அலட்சிய செயல்களுக்கு தண்டனை), பிரிவு 223 (பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமை), பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT