தமிழகம்

முதல்வரின் கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள்: தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்

செய்திப்பிரிவு

சென்னை: ​முதல்​வர் ஸ்டா​லினின் கொளத்​தூர் தொகு​தி​யில் 19,476 வாக்​காளர்​கள் சந்​தேகத்​துக்​குரிய​வர்​களாக இருக்​கிறார்​கள். 9,133 வாக்​காளர்​கள் போலி முகவரி​யில் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர் என்​று பாஜக எம்பி அனு​ராக் தாக்​கூர் அண்​மை​யில் பேசி​யிருந்​தார். இதையடுத்​து, தமிழக அரசின் தகவல் சரி​பார்ப்​பகம் விசா​ரணை மேற்​கொண்​டது. பின்​னர், இது தவறான தகவல் என விளக்​க​மும் அளித்​திருந்​தது.

இந்​நிலை​யில், முதல்​வர் ஸ்டா​லினின் கொளத்​தூர் தொகு​தி​யில் 19,476 வாக்​காளர்​கள் சந்​தேகத்​துக்​குரிய​வர்​களாக இருப்​ப​தாக​வும், இந்த விவ​காரம் குறித்​து, விசா​ரணை நடத்​தி, தீர்வு கான வேண்​டும் என தமிழக பாஜக செய்தி தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத் இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தில் புகார் கடிதம் கொடுத்​துள்​ளார்.

அந்த கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: 2023 மற்​றும் 2024 ஆண்​டு​களுக்​கான வாக்​காளர் தரவு பகுப்​பாய்​வில் கொளத்​தூர் தொகு​தி​யில் மொத்​தம் 19,476 வாக்​காளர்​கள் சந்​தேகத்​துக்​குரிய வாக்​காளர்​களாக கருதப்​படு​கின்​றனர். 4,370 இரட்டை வாக்​காளர் பதிவு​களும், போலி முகவரி​யுடன் 9,133 வாக்​காளர்​களும் உள்​ளனர்.

குறிப்​பாக, வீட்டு எண் 11, வாக்​குச்​சாவடி எண் 84-ல் 30 வாக்​காளர் அடை​யாள அட்​டைகள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன. மேலும், 5,964 வாக்​காளர்​கள் தொடர்​பில்​லாத வீடு​களில் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளனர். எனவே, கொளத்​தூர் தொகு​தி​யில் உடனடி​யாக தணிக்கை மேற்​கொண்​டு, போலி வாக்​காளர்​களை நீக்க வேண்​டும். அது​மட்​டுமில்​லாமல், வாக்​காளர் அடை​யாள அட்டை சிறப்பு தீவிர புதுப்​புத்​தல் பணி​களை​யும் தொடங்க வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT