தமிழகம்

குடிநீர், கழிவுநீர் வரி செலுத்த செப்.28-ம் தேதியும் வசூல் மையங்கள் இயங்கும்

செய்திப்பிரிவு

சென்னை: பொது​மக்​கள் குடிநீர், கழி​வுநீர் வரி மற்​றும் கட்​ட​ணங்​களை செலுத்த ஏது​வாக சென்னை குடிநீர் வாரி​யத்​தின் அனைத்து வசூல் மையங்​களும் வரும் ஞாயிற்​றுக்​கிழமை (செப்​.28-ம் தேதி) இயங்​கும்.

இது தொடர்​பாக சென்னை குடிநீர் வாரி​யம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை குடிநீர் வாரி​யத்​துக்கு பொது​மக்​கள் செலுத்த வேண்​டிய 2025-ம் ஆண்டு மார்ச் முதல் செப்​டம்​பர் மாதம் வரையி​லான முதல் அரை​யாண்​டுக்​கான குடிநீர், கழி​வுநீரகற்று வரி, கட்​ட​ணங்​கள் மற்​றும் நிலு​வைத் தொகையை செப்​டம்​பர் மாதம் 30-ம் தேதிக்​குள் செலுத்த வேண்​டும்.

வரி செலுத்த ஏது​வாக அனைத்து பகுதி அலு​வல​கங்​கள் மற்​றும் தலைமை அலு​வல​கங்​களில் இயங்​கும் வசூல் மையங்​கள் வரும் ஞாயிற்​றுக்​கிழமை (செப்​.28) காலை 10.30 மணி​முதல் மதி​யம் 01.30 மணிவரை இயங்​கும்.

மேலும், நுகர்​வோர்​கள் https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login என்ற வலை​தளத்​தைப் பயன்​படுத்தி பணம் செலுத்​தலாம். இ-சேவை மையங்​கள், யூபிஐ உள்​ளிட்ட பிற கட்டண முறை​களை​யும் பயன்​படுத்​தி​யும் குடிநீர், கழி​வுநீரகற்று வரி மற்​றும் கட்​ட​ணங்​களைச் செலுத்​தலாம். எனவே, நுகர்​வோர் செப்​.30-ம் தேதிக்​குள் வரி​கள் மற்​றும் கட்​ட​ணங்​களைச் செலுத்தி மேல்​வரியைத் தவிர்க்​கலாம்.

SCROLL FOR NEXT