தமிழகம்

முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு 

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ​கொளத்​தூர் தொகு​தி​யில் கடந்த 2011-ம் ஆண்டு நடை​பெற்ற தேர்​தலில் மு.க.ஸ்​டா​லின் வெற்றி பெற்​றது செல்​லாது என அறி​விக்​கக் கோரி, தொடரப்​பட்ட தேர்​தல் வழக்கு விசா​ரணையை உச்ச நீதி​மன்​றம் நவம்​பர் முதல் வாரத்​துக்கு தள்​ளி​வைத்​துள்​ளது.

கடந்த 2011-ம் ஆண்டு நடை​பெற்ற சட்​டப்​பேரவை தேர்​தலில்கொளத்​தூர் தொகு​தி​யில் போட்​டி​யிட்ட தற்​போதைய முதல்வரும், அப்​போதைய திமுக பொருளாள​ருமான ஸ்டா​லினை எதிர்த்து அதி​முக சார்​பில் சைதை துரை​சாமி போட்​டி​யிட்டார். அந்த தேர்தலில் ஸ்டா​லின் வெற்றி பெற்​றார்.

அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கூறி இந்த வெற்றியை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் சைதை துரை​சாமி வழக்கு தொடர்ந்​திருந்​தார். இந்த வழக்கு விசா​ரணை நீதிப​தி​கள் ஜே.கே.மகேஸ்​வரி, விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று நடந்​தது. அப்​போது சைதை துரை​சாமி தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் டி.எஸ். நாயுடு, ‘‘நீண்ட இடைவெளிக்​குப் பிறகு இந்த வழக்கு விசா​ரணைக்கு வந்​துள்​ளது. அடுத்த விசா​ரணைக்​கான தேதியை வழங்​கி​னால் எழுத்​துப்​பூர்​வ​மான வாதங்​களைத் தாக்​கல் செய்ய ஏது​வாக இருக்​கும்’’ எனக்​கூறி விசா​ரணையை தள்ளி வைக்​கக் கோரி​னார்.

அப்​போது தேர்​தல் ஆணை​யம் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் பிரதீக் குமார், ‘‘வாக்கு இயந்​திரங்​களை பாது​காப்​பாக வைத்​திருப்​பது சவாலான காரிய​மாக உள்​ளது. வாக்கு இயந்​திரங்​கள் வைக்​கப்​பட்​டுள்ள அறைக்கு 24 மணி நேர​மும் போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது. பாது​காப்பு அறை​யின் ஒருபக்க சுவர் சேதமடைந்து இடிந்து விழுந்​துள்​ளது. எனவே இந்த வழக்கை விரைந்து விசா​ரிக்க வேண்​டும்’’ என்​றார். அதையேற்க மறுத்த நீதிப​தி​கள், 2 மாதங்​களில் ஒன்​றும் நடந்து வி​டாது எனக் கூறி வழக்கு வி​சா​ரணையை நவம்​பர் முதல்​வாரத்​துக்​கு தள்​ளி​வைத்து உள்​ளனர்​.

SCROLL FOR NEXT