தமிழகம்

வன்னியருக்கு 10.5% ஒதுக்கீட்டை வலியுறுத்தி டிச.5-ம் தேதி பாமக ஆர்ப்பாட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: வன்​னியர்​களுக்கு 10.5 சதவீத உள்​ஒதுக்​கீட்டை வழங்க வலி​யுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் முன்பு டிச.5-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் என பாமக நிறு​வனர் ராம​தாஸ் அறி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அனைத்து ம‌க்​க‌ளுக்​கு​மான‌ சாதி​வாரி க‌ண‌க்​கெடுப்பை உட‌னே ந‌ட‌த்த வேண்​டும்.

அது​வ‌ரை இடைக்​கால ஏற்​பா​டாக வன்​னியர்​களுக்கு 10.5 விழுக்​காடு தனி ஒதுக்​கீட்​டைத் த‌டுக்​கின்ற நீதி​ம‌ன்ற‌ தடை​யாணை​யைப் போக்கி வன்​னியர்​களுக்கு இட‌ ஒதுக்​கீட்டை வ‌ழ‌ங்க வேண்​டும் என்ற முழக்​கங்​களை முன்​வைத்து டிச.5-ம் தேதி, அனைத்து மாவ‌ட்ட‌ ஆட்​சி​யர் அலு​வல​கங்​களின் முன்​பாக‌ அறவழியி​லான தொடர் முழக்​கப் போராட்​டத்தை நடத்​து​வதென்று வன்​னியர் சங்​க​மும், பாட்​டாளி மக்​கள் கட்​சி​யும் முடிவு எடுத்​துள்​ளது.

இந்​தப் போராட்​டத்தை ஒருங்​கிணைத்து முறைப்​படுத்​த​வும், வ‌ன்​னிய‌ர்​க‌ளின் தனி ஒதுக்​கீட்​டுக்​கான நியா​யத்தை அனைத்​துத் த‌ர‌ப்​பின‌ருக்​கும் தெளிவுபடுத்​த​வும் 9 பேரைக் கொண்ட போராட்ட குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. இக்​குழு​வின் வழி​காட்​டு​தலில், வ‌ன்​னிய‌ர்​க‌ளின் இட‌ஒதுக்​கீட்​டுப் போராட்​டத்தை வெற்​றிகர​மாக நடத்த பாட்​டாளி சொந்​தங்​களும், வன்​னிய உறவு​களும் முனைப்​புடன் செய​லாற்ற வேண்​டும்.

இந்த போராட்​டத்​தை தொட‌ர்ந்​து, தமிழக அரசு எடுக்​கும் நடவடிக்​கைகளைப் பொறுத்து, அடுத்​தக்​கட்ட போராட்​டங்​கள் குறித்து முடி​வெடுக்​கப்​படும். இவ்​வாறு அறிக்​கை​யில்​ கூறப் ​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT