தமிழகம்

இணையதள வழிகாட்டி மதிப்புக்கேற்ப பத்திரப் பதிவு கட்டணம் நிர்ணயம்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: பத்​திரப்​ப​திவு இணை​யதள வழி​காட்டி மதிப்​புக்​கேற்ப பத்​திரப் பதிவு கட்​ட​ணத்தை வசூலிக்க வேண்​டும் என்று முன்னாள் முதல்​வர் ஓ.பனனீர்​செல்​வம் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: தமிழகத்​தில் 52 மாத திமுக ஆட்​சி​யில், நிலங்​கள் மற்​றும் வீட்​டுமனை​களுக்​கான வழி​காட்டி மதிப்பு உயர்த்​தப்​பட்​டுள்​ளது. இந்த உயர்​வுக்கு நீதி​மன்​றம் தடை விதித்​தும், அதை நடை​முறைப்​படுத்​த​வில்​லை. பேசிக், பிரீமி​யம், அல்ட்ரா பிரீமி​யம் என 3 வகைகளாக பிரித்​து, வழி​காட்டி மதிப்பு நிர்​ண​யம் செய்​யப்​பட்​டது.

பின்​னர் தெரு வாரி​யாக​வும், அடுக்​கு​மாடி கட்​டிடங்​களில் பிரிபடா பாகத்​துக்கு தனி பதிவு முறை, கட்​டிடங்​களுக்கு தனி பதிவு முறை என்​றிருந்​ததை ஒரே பதி​வாக மாற்​றி​யும் கூட்​டுப் பதிவுக் கட்​ட​ணம் நிர்​ண​யம் செய்​யப்​பட்​டுள்​ளது. இதன் விளை​வாக 1000 சதுர அடிக்கு ரூ.5 லட்​சம் என்​றிருந்த பதிவு மற்​றும் முத்​திரைத்​தாள் கட்​ட​ணம் தற்​போது 2 மடங்​குக்​கும் மேல் உயர்ந்​து​விட்​டது.

பதிவுத் துறை இணை​யத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்ள வழி​காட்டி மதிப்​பை​விட கூடு​தலாக வழி​காட்டி மதிப்பை சார் பதி​வாளர்​கள் தெரி​விப்​பது வீடு மற்​றும் நிலம் வாங்​குபவர்​களிடையே அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. எந்​த​வித எழுத்​துப்​பூர்​வ​மான ஆணையும் அரசு வெளி​யி​டாத நிலை​யில், கூடு​தல் பதிவுக் கட்​ட​ணம் மற்​றும் முத்​திரைத்​தாள் கட்​ட​ணம் வசூலிப்​பது சட்​டத்​துக்கு புறம்​பானது.

இந்த விவ​காரத்​தில் முதல்​வர் தனிக் கவனம் செலுத்​தி, பதிவுத் துறை இணை​யதளத்​தில் உள்ள வழி​காட்டி மதிப்​புக்கு ஏற்ப முத்​திரைத் தாள் மற்​றும் பதிவுக் கட்​ட​ணத்தை மட்​டும் வசூலிக்க ஆவனசெய்ய வேண்​டும்​. இவ்​வாறு அறிக்​கை​யில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT