தமிழகம்

2,236 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்க்கடிக்கு மருந்து இருப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் உள்ள 2,236 ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களி​லும் நாய்க்​கடிக்​கான மருந்து இருப்பு வைக்​கப்​பட்​டுள்​ள​தாக அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்தார். சென்னை மேற்கு மாம்​பலம், மேட்​டுப்​பாளை​யம் எத்​தி​ராஜ் நகரில் நடை​பெற்ற ‘உங்களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாமை சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேற்று பார்​வை​யிட்​டார்.

அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தமிழகத்​தில் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்​டம் மிகப்​பெரிய அளவில் மக்​களை ஈர்த்​திருக்​கிறது. ஜூலை 15 முதல் நவ.14-ம் தேதி வரை 10 ஆயிரம் முகாம்​கள் நடத்த இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்டு இது​வரை தமிழகம் முழு​வதும் 7,427 முகாம்​கள் நடத்​தப்​பட்​டுள்​ளன. அதில் 55.55 லட்​சம் விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்​டுள்​ளன. சென்​னை​யில் இது​வரை 323 முகாம்​கள் நடை​பெற்​று, 5.45 லட்​சம் விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்​டுள்​ளன.

கடந்த 2010-11-ம் ஆண்​டு​களில் தமிழகத்​தின் வளர்ச்சி 13.12 சதவீத​மாக இருந்​தது. 14 ஆண்​டு​களுக்​குப் பிறகு, திமுக அரசு மீண்​டும் பொறுப்​பேற்ற பின், இரட்டை இலக்க பொருளா​தார வளர்ச்​சியை தமிழகம் மீண்​டும் பெற்​றுள்ளது. நாய் இனப் பெருக்​கத்தை குறைப்​பது குறித்து பல்​வேறு நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறோம்.

நாய்க்​கடி, பாம்​புக்​கடிக்​கான மருந்து என்​பது வட்​டார, மாவட்ட அளவி​லான மருத்​து​வ​மனை​களில் மட்​டுமே இருந்து வந்த நிலை​யில் இன்​றைக்கு தமிழகத்​தில் 2,236 ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களி​லும் நாய்க்​கடிக்​கும், பாம்​புக்​கடிக்​கும் மருந்து இருப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார். இந்​நிகழ்​வில் சென்னை மாநக​ராட்சி மண்​டலக் குழுத் தலை​வர் எம்​.கிருஷ்ண​மூர்த்​தி, மாமன்ற உறுப்​பினர் எம்​.ஸ்ரீதரன்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT