தமிழகம்

டிஎஸ்பியை கைது  செய்ய உத்தரவிட்ட முதன்மை அமர்வு நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க அறிக்கை: நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: ​காஞ்​சிபுரம் டிஎஸ்​பியை கைது செய்ய உத்​தர​விட்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி செம்​மல் மீது நிர்​வாக ரீதி​யில் நடவடிக்கை எடுக்​கும் வகை​யில், விஜிலென்ஸ் பதி​வாளர் தனது விசா​ரணை அறிக்​கையை நிர்​வாக குழு​வுக்கு அனுப்ப உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

காஞ்​சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிப​தி​யின் பாது​காவல​ராகப் பணி​யாற்​றிவந்த காவல் துறையைச் சேர்ந்த லோகேஷ்வரன் தற்​போது செங்​கல்​பட்டு மாவட்​டத்​துக்கு இடமாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளார். இந்​நிலை​யில், பூசி​வாக்​கம் பகு​தி​யில் பேக்​கரி நடத்தி வரும் லோகேஷ்வரனின் மாமனார் சிவக்​கு​மாருக்​கும், பேக்​கரிக்கு வந்த பட்​டியலினத்​தைச் சேர்ந்த முரு​கன் என்​பவருக்​கும் இடையே தகராறு ஏற்​பட்டு மோதலில் முடிந்​தது.

இதுதொடர்​பாக, இருதரப்​பும் வாலாஜா​பாத் காவல்​நிலை​யத்​தில் புகார் அளி்க்க, சிவக்​கு​மார் மற்​றும் லோகேஷ்வரன் மீது வன்​கொடுமை தடுப்பு சட்​டத்​தின்​கீழ் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​தனர். இந்​நிலை​யில், வன்​கொடுமை தடுப்​புச்​சட்ட வழக்​கில் காவலர் லோகேஷ்வரன் மற்​றும் அவரது மாம​னார் உள்​ளிட்​டோர் மீது போலீ​ஸார் உரிய நடவடிக்கை எடுக்​க​வில்லை எனக்​கூறிய மாவட்ட முதன்மை அமர்வு நீதிப​தி​யான செம்​மல், காஞ்​சிபுரம் டிஎஸ்பி சங்​கர் கணேஷை கைது செய்ய உத்​தர​விட்​டார்.

இந்​நிலை​யில், மாவட்ட நீதிப​தி​யான செம்​மலுக்​கும், அவரது பாது​காவல​ராகப் பணி​யாற்​றிய லோகேஷ்வரனுக்​கும் இடையே ஏற்​பட்ட தனிப்​பட்ட பிரச்​சினை காரண​மாக இந்த வழக்​கில் காஞ்​சிபுரம் டிஎஸ்​பியைக் கைது செய்ய மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி உத்​தர​விட்​டுள்​ள​தாகக் கூறி, காஞ்​சிபுரம் எஸ்பி தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. அந்த வழக்கை கடந்த செப்.9 அன்று விசா​ரித்த நீதிபதி என். சதீ்ஷ்கு​மார், காஞ்​சிபுரம் டிஎஸ்பி சங்​கர் கணேஷை சிறை​யில் அடைக்க முதன்மை அமர்வு நீதிபதி பிறப்​பித்த உத்​தரவை ரத்து செய்​து, டிஎஸ்​பியை விடு​வித்து உத்​தர​விட்​டார்.

மேலும், இந்த விவ​காரம் தொடர்​பாக முழு​மை​யாக விசா​ரணை நடத்தி அறிக்கை தாக்​கல் செய்ய உயர் நீதி​மன்ற விஜிலன்ஸ் பதி​வாள​ருக்​கும் உத்​தர​விட்​டிருந்​தார். இந்​நிலை​யில், இந்த வழக்கு நீதிபதி என்​.சதீ்ஷ்கு​மார் முன்​பாக நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது உயர் நீதி​மன்ற விஜிலென்ஸ் பதி​வாளர் தனது அறிக்​கையை நீதிப​தி​யிடம் சமர்ப்​பித்​தார்.

அரசு தரப்​பில் கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் கே.எம்​.டி.​முகிலன் ஆஜராகி, “மாவட்ட முதன்மை நீதிப​தி​யின் உத்​தர​வின் பேரிலேயே உணவுப்​பொருள் அதி​காரி​கள் அந்த பேக்​கரியை சோதனை​யிட்​டுள்​ளனர். இந்த விவ​காரத்​தில் இருதரப்​பும் சமரசமடைந்து பரஸ்​பரம் புகார்​கள் முடித்து வைக்​கப்​பட்​டபிறகு, மாவட்ட நீதிப​தி​யின் அழுத்​தம் காரண​மாகவே போலீ​ஸார் வன்​கொடுமை தடுப்​புச்​சட்​டத்​தின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளனர்” என்​றார்.

வழக்கு முடித்து வைப்பு: அதையடுத்து நீதிபதி என்​. சதீ்ஷ்கு​மார், “இந்த விவ​காரத்​தி்ல் நிர்​வாக ரீதி​யாக மாவட்ட முதன்மை அமர்வு நீதிப​திக்கு எதி​ராக நடவடிக்கை எடுக்க ஏது​வாக விஜிலென்ஸ் பதி​வாளர் தனது அறிக்​கையை உயர் நீதி​மன்ற நிர்​வாக குழு மற்​றும் நீதிப​தி​கள் இடமாற்ற குழு​வுக்கு அனுப்ப வேண்​டும்” என உத்​தர​விட்டு வழக்கை முடித்து வைத்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT