நலவாழ்வு சேவைக்கான உரிமைச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. 
தமிழகம்

நலவாழ்வு சேவைக்கான உரிமைச் சட்டம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சென்னை: மக்​களின் அடிப்​படை உரிமை​யான, நலவாழ்வு சேவைக்​கான உரிமைச் சட்​டத்தை உடனடி​யாக நிறைவேற்ற வலியுறுத்​தி, தமிழ்​நாடு மக்​கள் நல்​வாழ்வு மற்​றும் குடும்ப நல அமைச்​சரிடம் தமிழ்​நாடு அறி​வியல் இயக்​கம் சார்​பில் நேற்று கோரிக்கை மனு அளிக்​கப்​பட்​டது.

தமிழ்​நாடு அறி​வியல் இயக்​கம் சார்​பில், மாநிலம் முழு​வதும் கையெழுத்து இயக்​கத்தை நடத்தி, 50 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட கையெழுத்​துகளைப் பெற்று, அமைச்​சரிடம் சமர்ப்​பித்​து, நலவாழ்வு சேவைக்​கான உரிமைச் சட்​டத்தை உடனடி​யாக நிறைவேற்ற கேட்​டுக்​கொண்​டது.

இந்​தச் சந்​திப்​பில் இயக்​கத்​தின் மாநிலத் தலை​வர் திரு​நாவுக்​கரசு, பொதுச் செய​லா​ளர் மொஹம்​மது பாதுஷா, முன்​னாள் பொதுச் செய​லா​ளர் சுப்​பிரமணி, ஆரோக்​கிய உபகுழு பொறுப்​பாளர் டாக்​டர் அனுரத்​னா, இணைப் பொறுப்​பாளர் மாணிக்​க​தாய், பொருளாளர் சுதாகர், வட சென்னை மாவட்​டச் செய​லா​ளர் அரவிந்த் ஆகியோர் கலந்​து​கொண்​டனர்.

இந்​தச் சட்​டம், தமிழ்​நாட்​டில் அனை​வருக்​கும் குறைந்த செல​வில் தரமான, வெளிப்​படை​யான மருத்​துவ சேவை​களை உறுதி செய்​யும் முன்​மா​திரி முயற்​சி​யாக இருக்​கும் என இயக்​கம் தெரி​வித்​தது. இதுகுறித்து துறை அதி​காரி​களு​டன் இணைந்து ஒரு கூட்​டத்தை ஏற்​பாடு செய்து இந்த சட்​டத்தை நிறைவேற்ற கலந்து ஆலோ​சிப்​ப​தாக அமைச்​சர் அவர்​களிடம் கூறி​யுள்​ளார்.

SCROLL FOR NEXT