தமிழகம்

அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவரை நாகப்பட்டினத்துக்கு இடமாற்றம் செய்ய இடைக்காலத் தடை

செய்திப்பிரிவு

சென்னை: பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி மேட்​டூரில் இருந்து சென்​னைக்கு பாத​யாத்​திரை மேற்​கொண்ட அரசு மருத்​து​வர்​கள் சங்​கத் தலை​வர் டாக்​டர் பெரு​மாள் பிள்​ளை​யை, சென்​னை​யில் இருந்து நாகப்​பட்​டினத்​துக்கு பணி​யிட​மாறு​தல் செய்து பிறப்​பிக்​கப்​பட்ட உத்​தர​வுக்கு இடைக்​காலத் தடை விதித்​துள்ள உயர் நீதி​மன்​றம், அவரை திரு​வள்​ளூருக்கு மாற்​றம் செய்ய உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழகம் முழு​வதும் அரசு மருத்​து​வ​மனை​களில் நோயாளி​களின் எண்​ணிக்​கைக்​கேற்ப மருத்​து​வர்​களை​யும், செவிலியர்​களை​யும் நியமிக்க வேண்​டும். அரசு மருத்​து​வர்​களுக்கு அரசாணை 354-ன்​படி உரிய ஊதிய உயர்வு வழங்க வேண்​டும். கரோனா பேரிடரில் பணி​யாற்றி உயி​ரிழந்த அரசு மருத்​து​வர் விவே​கானந்​தனின் மனை​விக்கு அரசு வேலை வழங்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப் போராட்​டக்​குழு தலை​வ​ரான டாக்​டர் பெருமாள் பிள்ளை தலை​மை​யில் அரசு மருத்​து​வர்​கள் கடந்த ஜூன் 11 முதல் ஜூன் 19 வரை சேலம் மேட்​டூரில் இருந்து சென்னை மெரி​னா​வில் உள்ள முன்​னாள் முதல்​வர் கருணாநிதி நினை​விடம் நோக்கி பாத​யாத்​திரை மேற்​கொண்​டனர். தேனாம்​பேட்டை வந்​த​போது, போலீ​ஸா​ரால்

கைது செய்​யப்​பட்​டு, பின்​னர் மாலை​யில் விடுவிக்​கப்​பட்​டனர். இந்​நிலை​யில், சென்னை எழும்​பூர் அரசு குழந்​தைகள் நல மருத்துவ​மனை​யில் இணை பேராசிரிய​ராகப் பணி​யாற்றி வந்த டாக்​டர் பெரு​மாள் பிள்ளை அனு​ம​தி​யின்றி விடுப்பு எடுத்துள்ளதாகக் கூறி, நாகப்​பட்​டினம் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு பணி​யிட மாற்​றம் செய்​தும், அவருக்கு குற்ற குறிப்​பாணை வழங்​கி​யும் தமிழக அரசு உத்​தர​விட்​டது. அதைத்​தொடர்ந்​து, தன்னை பழி​வாங்​கும் ரீதி​யாக நாகப்​பட்​டினத்​துக்கு இடமாறு​தல் செய்து பிறப்​பிக்​கப்​பட்​டுள்ள உத்​தர​வுக்கு தடை விதிக்​கக் கோரி பெரு​மாள் பிள்​ளை, உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்கு விசா​ரணை நீதிபதி ஏ.டி.ஜெகதீஸ் சந்​திரா முன்​பாக நடந்​தது. அப்​போது, மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் கவுதமன், “அரசு மருத்​து​வர்​களின் நியாய​மான கோரிக்​கையை நிறைவேற்​றக்​கோரி உயர் அதி​காரி​களிடம் அனு​மதி கடிதம் கொடுத்​து​விட்டு அதன்​பிறகே மனு​தா​ரர் அமை​தி​யான முறை​யில் சக மருத்​து​வர்​களு​டன் பாத​யாத்​திரை மேற்​கொண்​டார். இந்​நிலை​யில், அவரை நாகப்​பட்​டினத்​துக்கு இடமாறு​தல் செய​திருப்​பது சட்​ட​விரோத​மானது” என வாதிட்​டார்.

அப்​போது அரசு தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் எம்​.பிந்​திரன், “இதுதொடர்​பாக அரசின் பதில்​மனுவை தாக்​கல் செய்ய அவகாசம் வழங்க வேண்​டும். மனு​தா​ரருக்கு இடைக்​கால நிவாரண​மாக திரு​வள்​ளூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி குழந்​தைகள் நலப் பிரி​வில் இணை பேராசிரிய​ராக பணி வழங்க அரசு தயா​ராக உள்​ளது” என தெரி​வித்​தார்.

அதையடுத்து நீதிப​தி, மனு​தா​ரரை நாகப்​பட்​டினத்​துக்கு இடமாற்​றம் செய்து பிறப்​பிக்​கப்​பட்ட உத்​தர​வுக்கு இடைக்​காலத்தடை விதித்​தும், திரு​வள்​ளூர் அரசு மருத்​து​வ​மனைக்கு அவருக்கு இடமாறு​தல் வழங்​க​வும் உத்​தர​விட்​டார். பி்ன்​னர், இந்த வழக்​கில் தமிழக அரசு இரு​வார காலத்​தில் பதிலளிக்க உத்​தர​விட்​டு, விசா​ரணையை தள்ளி வைத்​துள்​ளார்.

SCROLL FOR NEXT