தமிழகம்

அரசு விடுதிகளில் மாணவர்கள் கட்டாய மதமாற்றம்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: அரசு சமூகநீதி விடு​தி​களில் மாணவர்​களை கட்​டாய மதமாற்​றம் செய்​வ​தாக பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் குற்​றம்​சாட்டி உள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: சிவகங்கை மாவட்​டம் காளை​யார்​கோவி​லில் இயங்​கிவரும் ஆதி​தி​ரா​விடர் சமூகநீதி விடு​தி​யில், விடுதி காப்​பாளினி​யாகப் பணி​யாற்றி வரும் லட்​சுமி என்​பவர், விடுதி மாணவி​களை மதமாற்​றத்​துக்​குக் கட்​டாயப்​படுத்​து​வ​தாக​வும், மறுப்​பவர்​களை வன்​கொடுமை செய்​வ​தாக​வும், குளியலறை மற்​றும் கழி​வறை பயன்​பாட்​டில் மாணவி​களுக்​குப் பாரபட்​சம் காட்​டு​வ​தாக​வும், உணவுப்​பொருட்​களில் ஊழல் செய்​வ​தாக​வும் அதிர்ச்​சித் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த விடு​தி​யில் தங்​கிப் படிக்​கும் ஒரு மாண​வி​யின் பெற்​றோரே இதுகுறித்த புகார் கடிதத்தை தமிழக முதல்​வர் உட்பட சம்பந்தப்பட்ட துறை அதி​காரி​கள் அனை​வருக்​கும் அனுப்​பி​யுள்​ளார்.

முறை​யான அடிப்​படை வசதி​கள் மற்​றும் தகு​தி​யான ஊழியர்​களை மேம்​படுத்​தாமல், வெறும் கட்​டிடங்​களின் பெயரை விதவிதமாக மாற்றி வைப்​ப​தால் யாருக்கு என்ன பயன்? அரசு விடு​தி​யில் பணி​யாற்​றும் ஒரு அரசு ஊழியருக்கு மதமாற்​றம் செய்வதற்​கான துணிச்​சல் எங்​கிருந்து வந்​தது, மற்ற மதங்​களைப் பாது​காத்து இந்து மதத்​தைத் தொடர்ந்து தரக்​குறை​வாக விமர்சித்து வரும் திமுக ஆட்​சி​யில், இந்​துக்​களை மதமாற்​றம் செய்​தால் அரசு எவ்​வித நடவடிக்​கை​யும் எடுக்​காது என்ற இளக்காரமா, அதி​லும் மதமாற்​றத்​துக்கு மறுக்​கும் பிள்​ளை​களைப் பாலியல்​ரீ​தி​யாகத் துன்​புறுத்​து​வது என்​பது கோரத்​தின் உச்​சமல்​ல​வா? சமத்​து​வத்​தைப் பேணும் நமது நாட்​டில் மாணவர்​களிடையே இது​போன்ற கட்​டாய மதமாற்​றங்​கள் ஆபத்​தானவை.

அது​வும் அரசு விடு​திக்​குள் நடக்​கும் இந்த சமூக​விரோதச் செயலை நாம் ஒரு​போதும் அனு​ம​திக்க முடி​யாது. ஆளும் அரசும் அதை வேடிக்கை பார்க்​கக்​கூ​டாது. எனவே, இந்த சம்​பவத்​தில் தொடர்​புடைய காப்​பாளினியை உடனடி​யாக பணி​யிடை நீக்​கம் செய்​வதோடு, தமிழகத்​தில் இயங்​கிவரும் பிற அரசு மாணவர் விடு​திகளை​யும் தனது நேரடிக் கண்​காணிப்பு வளை​யத்​துக்​குள் கொண்​டுவர வேண்​டுமென முதல்​வர் ஸ்டா​லினை வலி​யுறுத்​துகிறேன்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT