மோகன கிருஷ்ணன் | கோப்புப் படம் 
தமிழகம்

வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் குறித்து பேச அரசியல் கட்சிகளுக்கு வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக பேச வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், வழக்கறிஞர்கள் மீது தமிழக காவல்துறையினர் பொய் வழக்குப் பதிவு செய்வது அதிகரித்து வருகிறது. இதேபோல், வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல், கொலை சம்பவங்கள் அதிகமாகி தமிழகத்தில் வழக்கறிஞர்க ளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

மாநில அரசு தமிழகத்தில் வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மேலும், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் குறித்து மக்களிடையே பேச வேண்டும்” என்று மோகன கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்

SCROLL FOR NEXT