தமிழகம்

தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் 17 பாலியல் குற்றங்கள்: நயினார் நாகேந்திரன் கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் கடந்த 5 நாட்​களில் 17 பாலியல் வன்​கொடுமை குற்​றங்​கள் நடந்​திருப்​ப​தாக பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்​தில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் கடந்த 5 நாட்​களில் 17 பாலியல் வன்​கொடுமை குற்​றங்​கள் நடந்​திருப்​ப​தாக வெளி​யாகி​யுள்ள செய்​தி​யைப் படித்​ததும் மனதில் எழுந்த முதல் கேள்வியே கடந்த 5 நாட்​களில் வெளியே தெரிய வந்த வன்​கொடுமை​கள் 17 எனில், வெளியே சொல்ல பயந்து மறைக்​கப்​பட்ட பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​கள் எத்​தனை?

இந்த 17 குற்​றங்​களில் 12 குற்​றங்​கள் குழந்​தைகளுக்கு எதி​ராக நிகழ்த்​தப்​பட்ட வன்​கொடுமை​கள் ஆகும். இந்த செயல்களை உற்​று​நோக்​கும் போது, கடந்த நான்​காண்​டு​களில் எத்​தனை குழந்​தைகளின் வாழ்வு சிதைக்​கப்​பட்​டுள்​ளது என்கிற கேள்வி எழுகிறது. ‘தமிழகத்தை தலைகுனிய விட​மாட்​டேன்’ என்று போலி​யாக சூளுரைக்​கும் தமிழக முதல்​வரே, நம் வீட்​டுப்​பெண்​களுக்​கும் குழந்​தைகளுக்​கும் பாது​காப்​பில்லை என்​பது தலைகுனிவு இல்​லை​யா?

ஆட்சி முடி​யும் தரு​வாயி​லா​வது வெற்று விளம்​பரத்தை விடுத்து முதல்வர் ஸ்டாலின் வெளி​ உலகத்துக்கு வர வேண்டும். நிர்​வாகத்​திறன் இன்​மை​யால், அவதி​யுறும் பொது​மக்​களின் அழுகைக் குரலை கேட்​டுப்​பாருங்​கள்.இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT