தமிழகம்

சாராயம் விற்ற பணத்தில் திமுக முப்பெரும் விழா: அண்ணாமலை விமர்சனம்

செய்திப்பிரிவு

சென்னை: சாரா​யம் விற்ற பணத்​தில்​தான் திமுக​வின் முப்​பெரும் விழா நடத்​தப்​பட்​டுள்​ள​தாக அண்​ணா​மலை விமர்சித்துள்ளார். சென்​னை​யில் அவர் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: கரூர் மாவட்​டத்​துக்கு 8 ஆண்​டு​களுக்கு முன்​பு, அன்​றைய எதிர்​கட்​சித் தலை​வ​ராக இருந்த ஸ்டா​லின் வந்​த​போது, ‘இந்த மாவட்​டத்​தில் 2 திருடர்​கள் இருக்​கிறார்​கள்.

பெரிய திருடன் செந்​தில்​பாலாஜி. சின்ன திருடன் செந்​தில்​பாலாஜி தம்​பி’ என பேசி​யிருந்​தார். தற்​போது அதே கரூர் மாவட்​டத்​தில் ஸ்டா​லின் பேசும்​போது, ‘உல​கமகா உத்​தமர் செந்​தில்​பாலாஜி. உலகத்​தில் சிறந்த மனிதர் செந்​தில் பாலாஜி தம்​பி’ என சான்​றிதழ் கொடுத்​துள்​ளார். யாருக்கு திருடர், ஊழல் பட்​டம் கொடுத்​தா​ரோ, அவர்​களை வைத்து இன்று முப்​பெரும் விழா நடத்​தி​யிருக்​கிறார் ஸ்டா​லின்.

இந்த விழாவே சாரா​யம் விற்ற பணத்​தில்​தான் நடத்​தப்​பட்​டுள்​ளது. திமுக​வுக்கு எடு​பிடி வேலை செய்​வதற்​காக தமிழகத்​தில் காங்​கிரஸ் கட்சி இருக்​கிறது. ஆனால், பாஜக ஒவ்​வொரு முறை​யும் புதிய மாநிலங்​களில் ஆட்​சி​யைப் பிடித்​துக் கொண்​டிருக்​கிறது. எனவே, வயிற்​றெரிச்​சலில் பாஜகவை காங்​கிரஸ் கட்சி விமர்​சித்து வரு​கிறது. மத்​திய உள்​துறை அமைச்​சரை பழனி​சாமி சந்​திக்​கும் செய்தி அனை​வருக்​கும் தெரிந்​ததே. எனவே, அவர் அமித் ஷாவை சந்​தித்​து​விட்டு வெளியே வரும் போது, முகத்தை மறைக்க வேண்​டிய அவசி​யம் இல்​லை.

அதி​முகவை கபளீகரம் செய்ய சிலர் முயன்​ற​போது, அதி​முகவை காப்​பாற்ற பாஜக தான் உறு​துணை​யாக இருந்​தது என பழனி​சாமி சொல்​லி​யிருப்​பதை நான் வரவேற்​கிறேன். 2016, 2017-ல் பாஜகவை பற்றி பல இடங்​களில் பலவித​மாக பேசப்​பட்​ட​போது, தமிழகத்​தில் நல்​லது செய்​வதற்​காக மட்​டும்​தான் பாஜக ஏங்​கியது என்ற உண்​மையை பழனி​சாமி மக்​கள் மன்​றத்​தில் வைத்​திருப்​பது எங்​களின் வாதத்​துக்​கும் இன்​னும் வலிமை சேர்த்​துள்​ளது. மக்​கள் நலனுக்​காக பாஜக இருக்​கிறது என்​பதை பழனி​சாமி உறு​திப்​படுத்​தி​யிருக்​கிறார்.

தமிழகத்​தில் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் முதல்​வர் வேட்​பாளர் பழனி​சாமி​தான் என அமித் ஷா அறி​வித்​துள்​ளார். எனவே, பழனி​சாமியை முதல்​வ​ராக்​கு​வதற்கு பாஜக தொண்​டர்​கள் பாடு​படு​வார்​கள். டிடி​வி.​தினகரனை இன்​னும் ஓரிரு நாட்​களில் நேரில் சந்​திக்க இருக்​கிறேன். தமிழகத்​தின் நலனுக்​காக கூட்​ட​ணி​யில் இணைவது குறித்து மீண்​டும் வலி​யுறுத்​து​வேன். நான் சம்​பா​தித்த பணத்​தில் விவ​சாய நிலம் வாங்​கி​னாலும், அதற்​கும் நான் விளக்​கம் கொடுக்க வேண்​டும். அடுத்த 5 ஆண்​டு​கள் நான் விவ​சா​யம் செய்​வதை அனை​வரும்​ பார்க்​க​த்தான்​ போகிறார்​கள்​. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT