தேசிய ஆவணக் காப்பகம், தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை சார்பில் சென்னை, கிண்டியில் நேற்று நடைபெற்ற 50-வது தேசிய ஆவணக் காப்பாளர்கள் குழு கூட்டத்தில், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், 2 ஆங்கில நூல்களை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் தேசிய ஆவணக் காப்பக தலைமை இயக்குநர் சஞ்சய் ரஸ்தோகி, உயர்கல்வித் துறை செயலர் பொ.சங்கர், தமிழ்நாடு ஆவணக் காப்பக முதன்மை செயலர் ஹர் சஹாய் மீனா, வரலாற்று வல்லுநர்கள் கலந்து கொண்டனர் 
தமிழகம்

300 ஆண்டு பழமையான 40 கோடி ஆவணங்கள் பராமரிப்பு: அமைச்சர் கோவி. செழியன் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்​நாடு ஆவணக் காப்​பகத்​தால் 300 ஆண்​டு​கள் பழமை​யான 40 கோடிக்​கும் அதி​க​மான ஆவணங்​கள் பாதுகாப்பாக பராமரிக்​கப்​பட்டு வரு​வ​தாக அமைச்​சர் கோவி. செழியன் தெரி​வித்​துள்​ளார். தேசிய ஆவணக் காப்​பகம், தமிழ்​நாடு ஆவணக் காப்​பகம் மற்​றும் வரலாற்று ஆராய்ச்சி மன்​றம் சார்​பில் 50-வது தேசிய ஆவணக் காப்​பாளர்​கள் குழுக் கூட்​டம் (பொன்​விழா) சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் தமிழக உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி. செழியன் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்றார்.

‘ஆங்​கிலேய ஆட்​சிக்கு எதி​ராக 1857-ம் ஆண்​டுக்கு முன்பு தமிழ்​நாட்​டில் நடை​பெற்ற போராட்​டங்​கள், தியாகங்​கள்’, ‘மைசூர் போர்​களும், தமிழ்​நாடு கைப்​பற்​றப்​பட்ட முறை​களும்’ ஆகிய 2 ஆங்கில நூல்​களை அவர் வெளி​யிட்​டார். மக்​கள் வசதிக்​காக பழமை​யான ஆவணங்​கள் கணினிம​யம் ஆக்​கப்​பட்​டுள்​ளன. அதற்​காக புதி​தாக உரு​வாக்​கப்​பட்ட www.digitamilnaduarchives.tn.gov.in என்ற இணை​யதளத்​தை​யும் தொடங்கி வைத்​தார்.

விழா​வில் அமைச்சர் பேசி​ய​தாவது: நாம் வாழ்ந்த வரலாற்றை நினைத்து செயல்​படும் நாடு​தான் உலகத்​தில் உயர்ந்த நிலையை அடைய முடி​யும். புதி​ய​வற்றை மட்​டுமே பின்​பற்றி செல்​லும் நாடு வரலாற்றை இழக்​கும். இந்​தி​யா​வின் உண்மை வரலாற்றை ஆராய, ஆவணங்​களை தேடி வரும் அறிஞர்​களுக்​கு, ஆதா​ரங்​களை வழங்​கும் ஆவணக் காப்​பாளர் பணி முக்​கிய​மானது. நாட்​டில் பல்​வேறு துறை​கள் இருந்​தா​லும், அவற்​றின் கோப்​பு​களைப் பாது​காத்​து, ஆவணக் காப்​பகத் துறை​தான் அவற்றை அடுத்த தலை​முறைக்கு எடுத்து செல்​கிறது.

அரசு நிர்​வாகத்​தின் முது​கெலும்​பு​களாக ஆவணங்​கள் உள்​ளன. கடந்த 1805-ம் ஆண்டு முதல் செயல்​பட்டு வரும் தமிழ்​நாடு ஆவணக் காப்​பகம் மிக​வும் பழமை​யானது. இங்கு அனைத்து துறை​களின் ஆவணங்​களும் அட்​ட​வணை​கள் தயாரிக்​கப்​பட்டு முறை​யாக பராமரிக்​கப்​படு​கின்​றன. தமிழ்​நாடு ஆவணக் காப்​பகத்​தால் 300 ஆண்​டு​கள் பழமை​யான 40 கோடிக்​கும் அதி​க​மான ஆவணங்​கள் பாது​காப்​பாக பராமரிக்​கப்​படு​கின்​றன.

ஜப்​பான் திசு முறையைப் பயன்​படுத்தி பழமை​யான ஆவணங்​களை செப்​பனிடும் பணி ரூ.10 கோடி​யில் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. இவ்​வாறு அவர் பேசி​னார். இந்த கூட்​டத்​தில், தேசிய ஆவணக் காப்பக தலைமை இயக்​குநர் சஞ்​சய் ரஸ்​தோகி, தமிழக உயர்​கல்​வித் துறை செயலர் பொ.சங்​கர், தமிழ்​நாடு ஆவணக் காப்பக ஆணை​யர்​ ஹர்​சஹாய்​ மீனா உள்​ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT