தமிழகம்

நாளை முதல் திரையரங்குகளில் பிரதமர் மோடி பிறந்தநாள் சிறப்பு குறும்படம்: பாஜக ஏற்பாடு

செய்திப்பிரிவு

சென்னை: பிரதமர் மோடி​யின் 75-வது பிறந்​த ​நாளை முன்​னிட்​டு, திரையரங்​கு​களில் பிரதமர் மோடி பிறந்​த​நாள் சிறப்பு குறும்​படத்தை திரை​யிட தமிழக பாஜக ஏற்​பாடு செய்​துள்​ளது. பிரதமர் மோடி தனது 75-வது பிறந்​த​நாளை நாளை (17-ம் தேதி) கொண்டாடு​கிறார்.

இதையொட்​டி, தமிழக பாஜக​வினர் அவரது பிறந்​த​ நாளை சேவை இரு​வார நிகழ்ச்​சி​யாக கொண்​டாடி வரு​கின்​றனர். அதன்​படி, மருத்​துவ முகாம்​கள் நடத்​து​வது, நலத்​திட்ட உதவி​கள் வழங்​கு​வது, படகு போட்​டிகள் நடத்​து​வது உள்​ளிட்ட பல்​வேறு நிகழ்ச்​சிகளை ஏற்​பாடு செய்து நடத்தி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், மோடி​யின் பிறந்​த​நாளை முன்​னிட்​டு, தமிழகம் முழு​வதும் திரையரங்​கு​களில் பிரதமர் மோடி​யின் சாதனை​கள், தியாகங்​கள் குறித்த ஒரு மணி நேர குறும்​படத்தை திரை​யிட பாஜக​வினர் ஏற்​பாடு செய்துள்​ளனர். இதற்​காக, குறிப்பிட்ட திரையரங்​கு​களை செப்​.17-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை முன்​ப​திவு செய்​துள்​ளனர்.

பிரதமர் மோடி பிறந்​த​நாள் சிறப்பு திரைப்​படத்தை பொது​மக்​கள், இளைஞர்​கள், மாணவர்​கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்​பினர்​கள் உள்​ளிட்ட அனை​வரும் அவர்​கள் குடும்​பத்​துடன் இலவச​மாக திரையரங்​கு​களில் கண்​டு​களிக்​கலாம் என பாஜக​வினர் தெரி​வித்​துள்​ளனர்.

இது தொடர்​பாக பாஜக மாநில செய்தி தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சேவை இரு​வார நிகழ்ச்​சி​யில் ரத்த தான முகாம்​கள், மருத்​துவ பரிசோதனை​கள், தூய்மை இயக்​கங்​கள், சுற்​றுச்​சூழல் பாது​காப்பு பிரச்​சா​ரங்​கள், கண்​காட்​சிகள், கருத்​தரங்​கங்​கள் உள்​ளிட்ட பல்​வேறு நிகழ்ச்​சிகள் இடம் பெறுகிறது.

இளைஞர்​களை ஈடு​படுத்தும் வகை​யில், சென்​னை​யில் 21-ம் தேதி மோடி விகாஸ் மாரத்​தான் நடத்​தப்பட உள்​ளது. முக்​கிய​மாக, 17-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தமிழகத்​தில் குறிப்​பிட்ட திரையரங்​கு​களில் சிறப்பு திரைப்​படம் திரை​யிடப்​படு​கிறது. இவ்​வாறு அதில் தெரிவிக்கப்பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT