தமிழகம்

அண்ணாவின் 117வது பிறந்த நாள்: இபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் மரியாதை

செய்திப்பிரிவு

சென்னை: அண்ணாவின் 117-வது பிறந்த நாளையொட்டி, அவரது திருஉருவச் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி தலையிலான அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இது குறித்து அக்கட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: "பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளான இன்று காலை (15.9.2025 – திங்கட் கிழமை), சென்னை அண்ணாசாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருஉருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப் படத்திற்கு, அ.இ. அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அவரை தொடர்ந்து, தலைமைக் கழகச் செயலாளர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், மற்றும் அதிமுக தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT