தமிழகம்

நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க டெல்லியில் கட்டுப்பாட்டு அறை: தமிழக அரசு அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் தங்கள் விவரங்களை டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தொடங்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் தெரிவிக்கலாம் என தமிழக அரசு கூறியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலைகுறித்து அறியவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் உரிய நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் நிலை குறித்து அறியவும், உதவிகளை வழங்கிமீட்கவும், டெல்லியில் உள்ள , தமிழ்நாடு இல்லத்தில் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை மற்றும் நேபாள நாட்டிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு, தமிழகத்தைச் சேர்ந்த பயணிகளை மீட்டுவர புதுதில்லி, தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். நேபாளத்துக்கு சுற்றுப்பயணம் சென்றதமிழகத்தைச் சேர்ந்த 116 பேரும் பத்திரமாக செப்.11ம்தேதி இந்தியா திரும்பிவிட்டனர்.

மேலும், நேபாளத்தில் சிக்கித் தவித்து வரும் தமிழர்கள் தங்களது விவரங்களை தெரிவிக்கவும், நேபாளத்தில் சிக்கியுள்ள தங்களது குடும்பஉறுப்பினர்களின் நிலைகுறித்து தெரிந்து கொள்வதற்கும் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளகட்டுப்பாட்டு அறையை 011-24193300 என்ற தொலைபேசி எண், 9289516712 (வாட்ஸ்ஆப்) என்ற கைபேசி எண்ணிலும், tnhouse@tn.gov.in , prcofficetnh@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT