மகாகவி பாரதியார் நினைவு நாளையொட்டி, சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மேயர் பிரியா, துறை செயலாளர் வே.ராஜாராமன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 
தமிழகம்

மகாகவி பாரதியார் நினைவு தினம்: ஆளுநர், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை

செய்திப்பிரிவு

சென்னை: மகாகவி பார​தியாரின் நினைவு தினத்தை ஒட்டி ஆளுநர் மற்​றும் அமைச்​சர்​கள் நேற்று பார​தி​யார் படத்​துக்கு மரியாதை செலுத்​தினர் தமிழக அரசு சார்​பில் மகாகவி பார​தி​யாரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்​கப்​பட்​டது. இதையொட்​டி, காம​ராஜர் சாலை​யில் அவரது சிலை அமைந்​துள்ள இடத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் மு.பெ.​சாமி​நாதன் கலந்​து​கொண்டு பார​தி​யார் படத்​துக்கு மலர்​கள் தூவி மரி​யாதை செலுத்​தி​னார்.

அவருடன் மாநக​ராட்சி மேயர் ஆர்​.பிரி​யா, தமிழ் வளர்ச்​சித் ​துறை செயலர் வே.​ராஜா​ராமன், தமிழ்​நாடு பனைமரத் தொழிலா​ளர்​கள் நலவாரிய தலை​வர் எர்​ணாவூர் நாராயணன் உள்​ளிட்​டோரும் கலந்​து​கொண்டு பார​தி​யார் படத்​துக்கு மலர்​கள் தூவி மரி​யாதை செலுத்​தினர்.

ஆளுநர் மாளி​கை​யில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் ஆளுநர் ஆர்​.என்​.ரவி பங்​கேற்று பார​தி​யார் படத்​துக்கு மலர்​கள் தூவி மரி​யாதை செலுத்​தி​னார். டெல்​லி​யில் உள்ள ரமண மகரிஷி சாலை​யில் அமைந்​துள்ள பார​தி​யாரின் சிலைக்கு மத்​திய தகவல் ஒளிபரப்​புத் ​துறை இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன் மாலை அணி​வித்து மலரஞ்​சலி செலுத்​தி​னார். டெல்லி தமிழ்ச் சங்க நிர்​வாகி​கள் இதில் கலந்து கொண்​டார்​கள்.

பார​தி​யார் நினைவு தினத்​தையொட்​டி, பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், “பார​தி​யாரின் கவிதைகள் எப்​போதும் எளிய மக்​களுக்​காகவே இருக்க வேண்​டும் என்​பதை லட்​சி​ய​மாகக் கொண்​ட​வர். ‘அச்​சமில்​லை, அச்​சமில்​லை’ என்று குழந்​தைகளுக்கு தைரி​யம் ஊட்​டிய பார​தி​யாரின் நினைவு தினத்​தில் போற்றி வணங்​கு​வோம்” என எக்ஸ் தளத்​தில் பதி​விட்​டுள்​ளார்.

தெலங்​கானா மாநில முன்​னாள் ஆளுநர் தமிழிசை சவுந்​தர​ராஜன், சென்னை திரு​வல்​லிகேணி​யில் உள்ள பார​தி​யார் நினைவு இல்​லத்​தில், அவரது சிலைக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தி​னார். தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை, “தனது எழுத்​துக்​களால் தேசிய உணர்வை விதைத்​து, சமூக சீர்​திருத்​தத்தை சுய​மாக முன்​னெடுத்து கவிதைகளால் வேற்​றுமைகளை நீக்​கிய​வர். தாய்​மொழி​யும், தாய்​நாடும் தனது உயிரெனக் கொண்​டிருந்த மகாகவி சுப்​பிரமணிய பார​தி​யார் அவர்​களின் பெரு​மை​களைப்​ போற்​றி வணங்​கு​கிறோம்​“ என பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT