தமிழகம்

தமிழகத்தில் கள்ளச்சாராயம், ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் திமுக தலைகுனிய வைத்து கொண்டிருக்கிறது: தமிழிசை விமர்சனம்

செய்திப்பிரிவு

சென்னை: கள்ளச்சாராயம், ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் தமிழகத்தை திமுக தலைகுனிய வைத்துக் கொண்டிருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்ப தாவது: தமிழகத்தை தலை குனிய விடமாட்டேன் என்கிறார் முதல்வர் ஸ்டாலின். முதலில் தமிழகத்தை தள்ளாட விடமாட்டேன் என்று கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி டாஸ்மாக் கடைகளை ஸ்டாலின் இழுத்து மூடட்டும்.

உங்களைப் போல எதிர்மறையாக இல்லாமல் நேர்மறையாக தமிழகத்தை தலை நிமிர வைப்போம் என்பதே எங்களது தாரக மந்திரம். 2026 அதை உறுதி செய்யும். நாங்கள் ‘தமிழகத்தை தள்ளாட விடமாட்டோம். தமிழகத்தை தலை நிமிர வைப்போம்’.

உண்மையில் சொல்லப் போனால், திமுக ஆட்சியில் கள்ளச்சாராயத்தால் ஊழல் வழக்குகளால், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாமல் தமிழகம் தலைகுனிந்து கொண்டிருக்கிறது.

சட்டம் ஒழுங்கு சீர் கேட்டால் தமிழகம் தலைகுனிந்து கொண்டிருக்கிறது. திமுக தமிழகத்தை தலைகுனிய வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தை தலை நிமிர வைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT