பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜகவினர் மரியாதை. 
தமிழகம்

அன்புமணி நீக்கம் பாமகவின் உட்கட்சி பிரச்சினை: நயினார் நாகேந்திரன்

சுப.ஜனநாயகச் செல்வம்

பரமக்குடி: பாமகவிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டது உட்கட்சி பிரச்சினை என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் 68-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பாஜக சார்பில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் அக்கட்சியினர் மரியாதை செய்தனர்.

பின்னர், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தியாகி இமானுவேல் சேகரன் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், சமூக நீதிக்காகவும் போராடியவர். அவரது தியாகத்தை போற்றும் வகையில் அவருக்கு மரியாதை செலுத்த வந்துள்ளோம். இங்கு அரசியல் பேசுவது ஏற்புடையதல்ல. விரும்பவில்லை. பாமகவிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டது அவர்களது உட்கட்சி பிரச்சினை” என்று கூறினார்.

SCROLL FOR NEXT