தமிழகம்

சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

செய்திப்பிரிவு

சென்னை: சட்​ட​விரோத பணப் பரிவர்த்​தனை புகார் தொடர்​பாக சென்​னை​யில் 5 இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். சென்னை அடை​யாறு காந்தி நகரை சேர்ந்​தவர் இந்​தி​ரா. மருத்​து​வ​ராக பணிபுரிந்து வரு​கிறார். நேற்று காலை இவரது வீட்​டுக்கு 5-க்​கும் மேற்​பட்ட அமலாக்​கத் துறை அதி​காரி​கள் வந்​தனர்.

சட்​ட​விரோத பணப் பரிவர்த்​தனை புகார் தொடர்​பாக, அவரது வீட்​டில் சோதனை நடத்​தினர். அப்​போது, துப்​பாக்கி ஏந்​திய மத்​திய தொழில் பாது​காப்பு படை வீரர்​கள் பாது​காப்​பில் ஈடு​பட்​டனர்.

இதே​போல, மேற்கு மாம்​பலத்​தில் சுப்​பிரமணி​யன், வேளச்​சேரி​யில் தொழில​திபர் பிஷ்னோய் ஆகியோரது வீடு​கள் உட்பட சென்​னை​யில் 5 இடங்​களில் சோதனை நடந்​தது. இரவு வரை நீடித்த சோதனை​யில் சட்​ட​விரோதபணப் பரிவர்த்​தனை தொடர்​பான பல்​வேறு ஆவணங்​களை அதி​காரி​கள் கைப்​பற்​றிய​தாக தெரிகிறது.

ஹரி​யானா மாநிலத்​தில் நடந்து வரும் ஒரு வழக்கு தொடர்​பாக சோதனை நடந்​த​தாக கூறப்​படு​கிறது. சோதனை முழு​மை​யாக முடிந்த பிறகு, இதுகுறித்த விவரங்​கள் தெரிய​வரும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

SCROLL FOR NEXT