தமிழகம்

கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொலை: திமுக பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன்

செய்திப்பிரிவு

சென்னை: கல்​லூரி மாணவரை கார் ஏற்றி கொலை செய்த வழக்​கில் திமுக பிர​முகரின் பேரனுக்கு நிபந்​தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்​ளது. காதல் தகராறில் சென்னை அயனாவரத்தை சேர்ந்த நிதின்​சாய் என்ற கல்​லூரி மாணவரை, கார் ஏற்றி கொலை செய்​த​தாக திமுக பிர​முகரும், சென்னை மாநக​ராட்சி மண்டல தலை​வரு​மான கே.கே.நகர் தனசேகரனின் பேரன் சந்​துரு கைது செய்​யப்​பட்​டார்.

கல்​லூரி மாணவ​ரான அவருக்கு ஜாமீன் கோரி தாக்​கல் செய்​யப்​பட்ட மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றம் 2 முறை தள்ளு​படி செய்​தது. இந்​நிலை​யில், அவருக்கு ஜாமீன் கோரி மீண்​டும் தாக்​கல் செய்​யப்​பட்ட மனு, நீதிபதி எஸ்​.​கார்த்​தி​கேயன் முன்பு விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது சந்​துரு தரப்​பில், “காரில் சந்​துரு சென்​றாரே தவிர, காரை அவர் ஓட்​ட​வில்​லை.

கல்​லூரி மாணவர் என்​பதை கருத்​தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்​டும்” என்று வாதிடப்​பட்​டது. இதற்கு அரசு தரப்​பு ஆட்​சேபம் தெரிவித்தது. இதையடுத்து நீதிப​தி, “குற்​றம் சாட்​டப்​பட்​டுள்ள சந்​துரு ஏற்​கெனவே 45 நாட்​கள் நீதி​மன்ற காவலில் சிறை​யில் இருந்துள்​ள​தா​லும், கல்​லூரி மாணவர் என்​ப​தா​லும் அவருக்கு நிபந்​தனை ஜாமீன் வழங்​கப்​படு​கிறது.

அவர் ரூ.10 ஆயிரம் மற்​றும் அதே தொகைக்​கான இருநபர் ஜாமீன் உத்​தர​வாதம் அளிக்க வேண்​டும். மறுஉத்​தரவு பிறப்​பிக்​கும் வரை தின​மும் காவல் நிலை​யத்​தில் கையெழுத்​திட வேண்​டும். சாட்​சிகளை கலைக்க கூடாது” என்று நிபந்​தனை விதித்து உத்தரவிட்​டார்.

SCROLL FOR NEXT